2010/2/18 Abdul Jabbar <abjabin@gmail.com>
தேவைப் படும்போதெல்லாம் முதல்வருக்குக் கைகொடுக்கும் இலங்கை பிரச்னை
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல் நிர்ப்பந்தங்கள் ஏற்படும் போதெல்லாம் கையில் எடுப்பதற்கென்றே முதல்வர் சில பிரச்னைகளை கை
வசம் வைத்திருக்கிறார். ஒன்று மாநில சுயாட்சி, மற்றது இந்தி எதிர்ப்பு. இப்போது மிகச் சௌகரியமாக இலங்கைத்
தமிழர் பிரச்னையும் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் நிர்ப்பந்தங்கள் ஏதும் இல்லாமலே இப்போது
அதை அவர் கையில் எடுத்திருப்பது தான் ஆச்சரியம் தருகிறது. ஒரு வேளை தான் பாராட்டு விழாக்களிலும், உலக
செம்மொழி மாநாட்டு விஷயங்களிலும் மூழ்கி மற்றவற்றை மறந்து விட்டதாக மக்கள் எண்ணி விடக்கூடதே
என்று நினைத்தாரோ என்னவோ...!
'தமிழர்களுக்கு இலங்கை அரசு அதிகார பகிர்வு அளிக்கவில்லை என்றால் திமுக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது' என்று தனக்கே உரிய பாணியில் சவடால் அடித்திருக்கிறார். அரசியல்வாதிகளை
விடுங்கள் அப்பாவி பொதுமக்களே எழுப்பும் கேள்வி என்னவென்றால் இத்தனை காலமும் ஈழத் தமிழர்கள்
சொல்லொணா இன்னல்களுக்கு ஆளானபோது திமுக அரசு வேடிக்கை பார்க்காமல் வேறு என்னதான் செய்தது ?
செய்யக்கூடிய காரியங்கள் பல இருந்தும், செய்யக் கூடிய இடத்தில் அவர்கள் இருந்தும் சாமர்த்திய அரசியல்
நாடகம் ஆடியதைத் தவிர சாதித்தது என்ன..! இந்த திடீர் ஞானோதயத்துக்கு என்ன காரணம் ? எப்போது இங்கே
போதி மரம் முளைத்தது..?
--------------------------------------------------
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment