Thursday, February 4, 2010

[தமிழமுதம்] Re: கண்ணீர்த் துளிகள்...

ஊற்று
 
வார்த்தைப் பஞ்சம்
ஏற்படும்போதெல்லாம்
கையேந்துகிறது மனது..
ஒரு பருக்கையாய் உன்னைப்
பிச்சையிட்டுச் செல்கிறாய்...
அட்சயபாத்திரமென
நிரம்பி வழிகிறது கவிதை...
 
 
கனவு...
 
நீ தூக்கம்...
நான் ஏக்கம்...
இரண்டும் தங்களுக்குள்
இணைந்து தம்மை
மகிழ்வித்துக்கொள்கின்றன
கனவாய்.........
 
 
வைரஸ்...
 
என்
எண்ணக்கோப்புகளைக்
குப்பைக்குத் தள்ளிவிட்டு
அங்கே
உன் தடங்களைப்
புதைத்துவிட்டுச் செல்கிறது
காதல் வைரஸ்...
 
 
திரைகாப்பு (Screensaver)
 
என்னைக்
காத்துக்கொள்ள
நீ தேவைப்படுகிறாய்...
உறங்கும்பொழுது
கனவாய்..
விழித்திருக்கையில்
கற்பனையாய்....
 
 
சுட்டி...
 
உன் தீண்டலை
மனனம் செய்தே
இயங்குகிறது இந்த
கணித்திரை...
நீ எலிச்சுட்டி...
 
 
மணம்...
 
உன் கூந்தல்
வாசனையை
முகர்ந்து மயங்கிப்
பிதற்றுகிறது
அகிற்குச்சிகள்... 
நறுமணமாய்... 
  
 
துகில்...
 
கிருஷ்ணனே
துகிலுரிந்தானாம்...
கண்ணீர் வடிக்கிறது
கிருஷ்ணாநகரென
பிளாட்டுகளாக்கப்பட்ட
விவசாய நிலம்...
 
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/

----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment