போலி...
வெளிச்சத்தை
மென்று தின்று
முழுமையாய்
விழுங்கிவிட்ட இரவு...
நடுச்சாலைத்
திருப்பதில் எதிர்பாராமல்
பேருந்து விளிம்பில்
அடிபட்டுவிட்டது
ஒரு உயிர்....
குருதி கொப்பளிக்க
மண்ணில்
புரண்டு கொண்டிருந்தது....
நிறுத்தப்பட்ட
பேருந்திலிருந்து
இறங்கின பல
நடைபிணங்கள்...
ஆளுக்கொரு முகமூடியுடன்...
முகமூடி கழற்றி
ரத்தத்தைப் பார்த்ததில்
பித்தம் தலைக்கேற
வாந்தியெடுத்தபடி
மயங்கிவிழுந்தது
ஒரு பிணம்....
அந்த இரவிலும்
சில நிமிடங்களில்
மிருகக்காட்சி
சாலையாகிப்போனது
சாலை...
தூக்கி வேறு
நல்ல இடத்தில்
கிடத்தமுனைந்த
இளசுகளை இழுத்துச்
சென்றன சில
கதர்ச்சட்டை காந்தீயங்கள்...
மடியில் கிடத்தி
தண்ணீர் கொடுக்கக்கூட
தயாராயில்லை எவரும்...
மண்ணில் உருண்ட
உயிர் முனகியது....
காவல்துறை வரவுக்கென
காத்திருந்தன பிணங்கள்...
காவல்துறைவந்தது...
வேறுபட்ட முகமூடியணிந்து...
முனகிக்கிடந்த உயிரிடம்
முகவரி விசாரித்தது...
பதில் சொல்லமுடியாமல்
மருத்துவ வேண்டிய
உயிரிடம்
மிரட்டிப்பார்த்தது....
பின்னர்
அவசர ஊர்திக்கென
அமைதி காத்திருந்தது...
அவதியாய் வரவேண்டிய
ஊர்தி
அவதியானபின்தான் வருமோ..??
ஏறத்தாழ
முப்பது நிமிடங்கள்
கரைந்தது...
அடிபட்ட உயிரும்
கரைந்தது...
இப்பொழுது புரிந்தது
அடிபட்ட அந்தக் கிழவிக்கு
இது முகமூடிபோட்ட
ஜனநாயகமென்று ...?!
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
-- நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment