http://tharapurathaan.blogspot.com/2010/02/blog-post_19.html
உள்ளாள் வைத்து வேலை செய்யறதைப் பாத்திருக்கீங்களா? கேட்டிருக்கீறிர்களா?
உதாரணத்தோட விளக்கினா போச்சு.
நம்ம கதையே ஒண்ணு இருக்குதுததல்ல. 1971ல் நாட்குறிப்பை பார்த்துதான்
நமக்கே ஞாபகம் வந்தது. கோயமுத்தூரில் நம்ம உறவு ஆத்தா ஓண்ணு கண்ணு
ஆப்ரேசனுக்காக ராயல் தியேட்டருக்கு அருகிலுள்ள ஞானா பரணம் கண்ணு
ஆஸ்பத்தியிலே பண்ணிக்கிட்டதால துணைக்கு அய்யா போக வேண்டிய பாக்கியம்
கிடைத்தது. அப்பவே கோயமுத்தூர் போறதுன்னா நம்ம ஊரில் பெரிய
மரியாதையில்ல. நானும் ஐம்முன்னு கிளம்பிட்டேன். கிழவிக்கு காவல் என்ற
பெயரில் ராயலில் ஒண்ணு பக்கத்திலே இருதயாவுலே ஒண்ணுன்னு ஒரே ராத்தியிலே
இரண்டு படம் பார்த்து போட்டு நல்ல குடி நாச்சி மாதிரியில்ல இருந்தேன்.
மறுநாள் காலையிலே அப்படியே சும்மா ஒரு பொடி நடை விடலாம்ன்னு மேலாக்கு
பாத்துக்கிட்டே நடந்தேன். எதிரில் ஒரு அண்ணன் வந்தாரு.
வந்தாரா...ம்..ன்னு சொல்லுங்க. அப்பத்தேன் சுவாரசியமா சொல்ல வரும்.
அண்ணாச்சி என்னைப் பாத்தாரு. நான் அவரைப் பார்த்தேன். கீழே குனிந்து ஓரு
பொட்டணத்தை கையில் எடுத்தாரு. எடுத்தாரா.. நான் அவரை பார்த்தேன்.. அவர்
என்னை பார்த்தாரு.. எனக்கு தெரியிற மாதிரி தெரியாம பிரிச்சாரு...நான்
அவரை பார்த்தேன்..அவர் என்னை பார்த்தாரு. நான் அவரு கையிலிருக்கிற
பொட்டணத்தையும் பார்த்துபுட்டேன். நான் பார்த்துபுட்டேன்கிறதை அவரு
பாத்துபுட்டாரு. ..புட்டாரா... அழகான சரிகைப் பேப்பரில் தங்க செயின்
ஒண்ணு மடித்திருந்தது. உடனே என் கையை பிடித்து தம்பி யாருகிட்டேயும்
சொல்ல வேண்டாம்... செயினை நான் வைத்து கொண்டு உங்களுக்கு பணம் வேணும்னா
தர்றேன் அப்படின்னாரு...எனக்கு வந்ததே கோபம்..நம்மளை கூமட்டையின்னு
நெனைச்சுட்டான் போல அப்படின்னு நான் நெனைத்து ..நான் வேணும்னா உனக்கு
பணம் தர்றேன் எனக்கு கொடுங்க செயினை அப்படின்னே..
தம்பி தம்பி.. எங்கிட்ட 150ருபாய் தான் இருக்கிது. .அதை வாங்கிட்டு
ஒண்ணும் தெரியாம போங்க தம்பி... இந்த சமயத்தலே எங்க எதிரில் ஒருபெரியவர்
பதறி அடித்தபடி அழுது கொண்டும் தேடிக் கொண்டும் வந்தார். அய்யா எனது
மூணு பவுனு செயினைக் காணாம்.. பார்தீங்களா? நேற்றுதான் ரூ.600 க்கு
வாங்கினேன்ன்னு அழுதுகிட்டே போறாரு. நான் உடனே அவரை கூப்பிட்டு
கொடுத்து விடலாம் என நினைக்கும் போது நம்ம அண்ணன்..பாசத்தோட...
தம்பி..பேசாம இருங்க செயின் எனக்கு இல்லாட்டியும் பரவாயில்லை.. நீங்களே
வைச்சுங்கோ..ன்னு பாச கயித்தை வீசுனாரு. தப்பிக்க முடியாம ..பாசத்திற்கு
கட்டு பட்டு ..அண்ணே எங்கட்ட 110 ரூ. தான் அண்ணே இருக்குது..பரவாயில்லை
தம்பி.. அதையாவது சீக்கிரம் கொடுங்க அந்த ஆளு வர்ராரு..பணத்தை
புடிங்கிட்டு விட்டாரு சூட்......அது வரை மந்திரித்து விட்ட கோழி மாதிரி
இருந்த நான் உடனே பவுனு ரூ.200. ரூ.110க்கு 3 பவுனா அப்படின்னு
நினைத்தேன்.
ஆ...ஹா.. நாம எந்த ஊருன்னு தெரிந்து பாசத்திலேயே கட்டி போட்டுட்டு
போயிட்டாரே . அண்ணா.........அண்ணா...ன்னு கவிதை பாடின்னா எழுந்து வரவா
போராரு. அப்பத்தான் தெரிந்தது கோயமூத்தூர்காரன் உள்ளாளு வைத்து
வூட்டியை மடக்கிட்டான்டான்னு. இதல யாரு உள்ளாளு.? பதறி அழுதுகிட்டு
வந்தாரே அவருதான் நடிகர் திலகம். இதை வெளியில யாருகிட்டேயும் சொல்ல
கூடாதுன்னு பாதுகாத்து வைச்சிருந்தேன். ஆனா ரகசியத்தை பதிவுக்காக பங்கு
போட வேண்டியதாக ஆகிப் போச்சு. இது மாதிரி ஊட்டியை மடக்கிய சம்பவம்
உங்ககிட்டேயும் இருக்கும் இருந்தால் என்னை மாதிரி வெளியே சொல்லி
திரியாதீர்கள். கை கூடி வருது மாதிரி தெரியுது. வணக்கம். வர்றேன்
சாமிகளா.
--
சாந்தி
Forgive everyone everything.
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment