Friday, February 19, 2010

[தமிழமுதம்] பெண்களுக்காக....

பெண்களுக்காக....

http://vimarsagan1.blogspot.com/2010/02/blog-post_19.html
சின்னத்திரை, மற்றும் சினிமாக்களில் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும்
சித்தரிப்பதை தடைசெய்ய வேண்டும் என அகில இந்திய பெண்கள் ஆணையம் உச்ச நீதி
மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
என்னது அப்படியாவா? உண்மையில் இப்படி ஒரு வழக்குத்தொடர்ந்திருப்பது
பெண்கள் ஆணையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பெண்களுக்கே
தெரிஞ்சுருக்குமான்னு தெரில.

"பிரபல நடிகை சினிமா ஷீட்டிங்கில் காயமடைந்தார்", "பிரபல துணைநடிகை ரகசிய
திருமணம்" இதுபோன்ற நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான வரலாற்று
சம்பவங்களை பளிச்சென்று கலர்புல்லாக செய்தியிடும் பத்திரிக்கைகள் மேலே
சொன்ன முக்கியமான செய்திகளை வெளியிட்டு பெண்கள், மற்றும் அனைவரின்
ஆதரவுகளை திரட்டி அந்த அந்த வழக்கின் வெற்றிக்கு உதவுவதில்லை.

சின்னத்திரை விளம்பரங்களில் பெண்கள் இல்லாமல் ஒரு விளம்பரம் வருகிறதா?
ஆண்களின் அன்டர்வேர் விளம்பரத்திலிருந்து டாய்லெட் கழுவுற கெமிக்கல்
விளம்பரம் வரை பெண்கள்தான். பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஆண்கள் உள்ளாடை
விளம்பரம் வந்துகொண்டிருந்தது.
90 களில் அந்தவிளம்பரம் ரொம்ப பிரபலம். தூர்தர்ஷனில் கூடவந்தது மற்றும்
முன்பு ஆ.வி.,குமுதம் புத்தகங்களில் கடைசிப்பபக்கத்தில் அல்லது பின்பக்க
அட்டையில் இந்த விளம்பரம் வந்தது. சில இடஙகளில் அதன் ஹோர்டிங்
வைக்கப்பட்டதகாவும் நினைவு. அது ஒரு இளம் பெண்ணை ரவுடி ஒருவன் மிரட்ட
எங்ககேயிருந்தோ ஹீரோ பறந்து வந்து ரவுடியை அடிச்சுப்போட்டு அந்த பெண்ணை
காப்பாற்றுவார். அப்போது காற்றடித்து அவர் போட்டிருந்த பெரிய ஓவர்கோட்
விலகி உள்ளே வெறும் ஜட்டி மட்டுமே அணிந்திருப்பார். உடனே அதன்
பெயரைப்போட்டு இது ஹீரோக்களின் தேர்வு அப்படின்னு கேப்ஷன் போடுவானுங்க.
ஏன் அதையே ஏதாச்சும் விலங்கை காப்பாற்றுபோல சின்ன குழந்தைகளை
காப்பாற்றுவது போல கூட எடுத்திருக்கலாம். இப்படி சம்பந்தேமே இல்லன்னாலும்
கூட விளம்பரம் மக்களை சென்றடைய பெண்கள் தேவை.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சமையல் பொடி, சோப்புபவுடர், குக்கர்,
கிரைண்டர், சொட்டுநீலம் போன்ற விளம்பரங்கள் பெண்கள் என்றும்
வீட்டுவேலைக்காக மட்டுமே என சொல்லாமல் சொல்லுகின்றன. தனியார் சேனல்களில்
வெளிவரும் சில நிகழ்ச்சிகள் அசிங்கத்தின் உச்சம். பெண்களை கவரும்
ஆண்களுக்கான நாத்த மருந்துவிளம்பரங்கள் கொடுமையின் உச்சம். சம உரிமை
கேட்கும் பெண்கள்தான் அதில் நடிக்கவும் செய்கிறார்கள் மற்றும் அந்த
விளம்பரங்களின் க்ரியேட்டிவ் டீமில் கூட பல பெண்கள் இருக்கிறார்கள்
என்பது அதைவிட கொடுமை.


பெண்களை போதை பொருளாகவும், கவர்ச்சிப்பொருளாகவும் காண்பிப்பது ஒன்றும்
புதுசு அல்ல. இப்ப திடீர்னு ஏன் பெண்கள் ஆணையத்திற்கு ஞானதோயம்
வந்துச்சுன்னும் தெரில. இதுபோன்ற வழக்குகள் வெறும் கண்துடைப்பு மட்டுமே.
இதை அமல்படுத்துவது என்பது இந்தியாவில் நடக்கு இயலாத காரியம். மும்பையில்
லேடீஸ் பார் தடைசெய்து அரசு அறிவித்தது. அறிவித்த சிலநாட்களில்
வயிற்றுப்பிழைப்புக்காக அதை நம்பியிருந்த பல பெண்கள் போராட்டம் நடத்த
இப்போது மீண்டும் தொடர்கிறது.

தடைவிதிக்கும் அரசு அதை நம்பியிருப்பவர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு
மாற்றாக எதையும் செய்திவதில்லை. செய்தாலும் அது முழுமையாக
சென்றடைவதில்லை. பாவம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்
அரசியல்வாதிகளும்,அதிகாரி்களும் சாப்பிட்டுவிட்டு மிச்சம்மீதி
அவர்களுக்கு செல்லும்போது ஒன்றும் பாக்கி இருக்காது.

இது எல்லாவற்றுக்கும் ஆண்கள் மட்டுமே காரணம் என்று குறைசொல்லி எந்த
பிரயோஜனமும் இல்லை. விளம்பரங்களிலும், சினிமாக்களிலும் ஆபாசமாக
நடிக்கமாட்டோம், அதுபோன்ற நிகழ்ச்சிகளை தயாரிக்க மாட்டோம், பெண்களை
ஆபாசமாக சித்தரிக்கும் விளம்பரங்கள் கொண்ட பொருட்களை புறக்கணிப்போம் என
இந்தியாவின் ஒட்டுமொத்த பெண்களும் மீண்டும் ஒரு ஒத்துழையாமை போராட்டம்
நடத்தினால் மட்டுமே இது தவிர்க்கப்பட சாத்தியம். பெண்கள் நினைத்தால்
நடக்காதது என்று ஏதாச்சும் இருக்கிறதா என்ன?

இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது வெறும்
விளம்பரத்திற்காக மட்டுமே. ஒன்றும் மாறப்போவதில்லை.

--
சாந்தி

Forgive everyone everything.

http://punnagaithesam.blogspot.com/ =============================

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment