Thursday, February 18, 2010

[தமிழமுதம்] பாராட்டு = வயிற்றெரிச்சல்...!




முதல்வருக்குப் பாராட்டு வயிற்றெரிச்சலை கிளப்பத்தான் - துரை முருகன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------

முதல்வருக்கு எத்தனை பாராட்டு விழாக்கள் நடத்தினாலும் தகும் என்று ஒரு சாராரும், இது சற்று அதிகமாகவும்
மலிவாகவும் போய்க் கொண்டிருக்கிறது என்று வேறு ஒரு சாராரும் தர்க்கித்துக் கொண்டிருக்க, சட்டத்துறை அமைச்சர் துரை முருகன்,அவருக்கே உரிய பாணியில், ஒரு கருத்தை திருவாய் மலர்ந்தருளியுள்ளார். "பாராட்டு விழாக்களை நடத்த, நடத்த எதிர்க்கட்சிகள் வயிறெரிவார்கள். அவர்கள் வயிற்றெரிச்சலை மேலும் அதிகப்படுத்த மென்மேலும் விழாக்களை நாங்கள் நடத்துவோம்" என்பது தான் அது.  இனி முதல்வருக்கான பாராட்டு விழாக்களைப் பற்றி யாரும் விமர்சிக்காது இருப்பது உத்தமம்.

 ஏனெனில் அத்தைகைய விழாக்களின் நோக்கத்தை துரை முருகன் மிகத் தெளிவாக விளக்கி விட்டார். துரை முருகன் ஏன் இப்படிப் பேசுகிறார் என்ற சூட்சுமத்தையும் முதல்வர் மேடையிலேயே போட்டு உடைத்து இருக்கிறார். ரஜனி துரைமுருகனைப் பார்த்து, 'நீங்கள் (மது) சாப்பிடுவீர்களா... என்ன 'ப்ராண்டு' ? 'ரெட்டா, ப்ளேக்கா...? என்று
கேட்டாராம். ஏன் அப்படிக் கேட்டார் என்று தெரியவில்லை துரை முருகன் மது சாப்பிடுகிறாரா இல்லையா என்பது பற்றி நாம் கவலைப்படத்தேவை இல்லை. அது நம் வேலையும் இல்லை. ஆனால் அவர் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது பற்றி இனி நாம் ஆச்சரியப் படத் தேவை இல்லை.

------------------------------------------------------------------------------------------------

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment