Monday, January 4, 2010

[தமிழமுதம்] Re: 33வது புத்தகக் காண்காட்சி அனுபவங்கள் – 1

சொல்ல மறந்துட்டேன்,

இவ்வருடம் நடக்கும் 33வது புத்தக கண்காட்சியில் கீழ்கண்ட கடைகளில்  எனது படைப்புகள் கிடைக்கும்

காலப்பயணிகள் – சிறுவர் நாவல்

கடை எண்: 222-223 : திரிசக்தி பதிப்பகம்
கடை எண்: 207-208 : கிரிகுஜா பதிப்பகம்
கடை எண்: 409-410 : அருவி புத்தக உலகம்

தமிழ் வாசகத்துடன் புகைப்பட போஸ்டர்கள்

கடை எண்: 409-410 : அருவி புத்தக உலகம்

- விழியன்



2010/1/3 Umanath Selvan <umanaths@gmail.com>

33வது புத்தகக் காண்காட்சி அனுபவங்கள் – 1

நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வருடத்தின் முதல் நாள் கொப்பளிக்கும் உற்சாகமும் உத்வேகமும் நிறைந்ததாகவே இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் வாழ்த்துக்களோடும் ஆனந்தத்தோடும் ஆரம்பிக்கும். இம்முறை பிறந்துள்ள 2010 புது உற்சாகத்தினை எனக்கு அளித்திருக்கின்றது. டிசம்பர் 31ஆம் தேதி இரவின் பாதிப்பகுதி சென்னை சைதை கிளை நடத்திய கலை இரவில் கழிந்தது. மீதிப்பாதி எங்கள் குடியிருப்பில் நடந்தேறியது.

புத்தக கண்காட்சியின் மூன்று நாள் குறிப்புகள் (1,2,3 ஜனவரி 20100
-    குடும்பம் சகிதம் அனைவரும் கண்காட்சியில் ஆஜர்.
-    தனித்தனியாக பிரிந்து வேட்டையாடுவது என முடிவெடுத்தோம்
-    முதலில் திரிசக்தி பதிப்பகம் சென்று என் புத்தகத்தினை காண ஆவலுடன் தேடி கடை அடைந்தோம். அழகாக வீற்றிருந்தது புத்தகம்
-    முதல் நாள் குடும்பத்துடனும், இரண்டாம் நாள் தனியாகவும், மீண்டும் மூன்றாம் நாம் குடும்பத்துடனும்
-    வம்சி கடை வசீகரித்தது. ஒரு விதமான அமைதியினை பார்த்தவுடன்/ நுழைந்தவுடன் ஏற்படுத்தியது.
-    உயிர்மை/காலச்சுவடு/ ஆனந்தவிகடன் கூட்டம் அலைமோதியது
-    இந்த வருடம் ஏராளமான குழந்தை புத்தகங்கள்/ சீ.டீக்கள்/ சாதனங்கள்
-    தினமும் மாலையில் கூட்டம் அதிகமாக இருந்தது.
-    மூன்றாம் நாள் கமலுக்காக கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் தலைவர் அதிகம் பேசவில்லை
-    உணவகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட தூரம் நடக்க வேண்டுமே என குறைவாகவே சென்றேன். (அட அங்க நடக்கிற தூரத்தில் இங்க கொஞ்சம் கடைகளை பார்க்கலாம் அல்லவா )
-    மிக திருப்தியாக இருந்தது நடப்பது.
-    ஒவ்வொரு புத்தகத்தை தொடும்போதும் அதன் ஸ்பரிசம் உள்ளுக்குள் ஏதோ செய்தது.
-    பலவேறு தரப்பட்ட மனிதர்களை ஓர் குடையில் கீழ் சந்திக்கும் இவ்வாய்ப்பு மிக அரிதானது. புத்தகம் என்னும் மாயம் செய்யும் லீலைகள்

சந்தித்த முகங்கள்
-    கே.ஆர். அதியமான். இணைய நண்பர். இரண்டு முறை சந்தித்துக்கொண்டோம். "உலகம் சின்னது" என்றார் இரண்டாம் முறை பார்க்கும் போது
-    அப்துல் ஜாபர் ஐயா. அறிமுகம் தேவையில்லா குரலுக்கும் தமிழுக்கும் சொந்தக்காரர். மேடை அருகே சந்தித்தேன்.
-    கவிதைக்காரன் இளங்கோ. நாளைய இயக்குனர்.
-    இளங்குமரன். வேலூர்காரர். அறிவியல் இயக்க ஆர்வலர். சின்ன வயது முதலே அறிமுகம் உண்டு. காலை முதல் வேட்டையாடி புத்தகம் குவித்துள்ளார். தினசரி உழைத்தாலே ஊதியம். சுமார் ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கி செல்வதாக சொன்னார்
-    ஆறுமுக நயினார் – அப்பாவின் நண்பர்.
-    அஜயன் பாலா – ஒரு வாரம் முன்னர் நடந்த குறும்பட இயக்க பயிற்சி பட்டறையில் நல்ல அறிமுகமானார்
-    அண்ணன் அறிவுமதி
-    எஸ்.ராமகிருஷ்ணன்
-    மனுஷ்யபுத்திரன்
-    இணையதள நண்பர் நர்சிம்
-    அகநாழிகை பொன். வாசுதேவன்
-    கவிஞர் நளன்
-    லதா ராமகிருஷ்ணன்
-    இணைய தம்பி சார்லஸ், ஓம்ஸ்ரீ
-    சுவாமிநாதன் – வேலூர்காரர். பொதுப்பணி துறையில் இருக்கின்றார்.

புத்தகம் ஒரு போதை. புத்தகம் ஒரு இன்பம். புத்தகம் தனி உலகம். புத்தகம் என்ன தான் செய்யவில்லை?

- விழியன்

http://vizhiyan.wordpress.com



--
விழியன்
http://vizhiyan.wordpress.com

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment