Monday, January 4, 2010

[தமிழமுதம்] கீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..!

 

tagore-line-image

 
கீதாஞ்சலி (84)
 
பிரிவுத் துயர்..!
 
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
 
 
 

மரணத் துயர் போல ஏனையப்
பிரிவுத் துன்பந்தான்
பரவி வருகிற திப்போது,
தரணி எங்கணும் !
வரம்பு வேலியற்ற
வான்வெளியில்
உருவங்கள்
எண்ணற்ற முறையில்
வேறுபட்டு
துன்பப் பிரிவுகள்
கண்திறந்து வெளிவரும் !


இம்மாதிரித்
துக்கப் பிரிவால்தான்,
இரவு முழுவதும்
விண்மீண்கள் தம்மை,
உற்று நோக்கு கின்றன,
ஊமைத் தனமாய்
ஒன்றை ஒன்று !
சலசலக்கும்
இலைகளின் வழியே,
இப்பிரிவுத் துயர்தான்
ஒப்பிலாச் சோகக் கீதமாய்,
வேனிற் காலக் கருவானில்
ஆடி மாதம்
மழைத்துளி களிடையே,
பாடி நுழைகிறது !


அடங்காமல்
அத்துமீறிக் கொண்டு
தொடரு மிந்த
துயர்ப் பிரிவுகள்தான்,
காதலாகவும், மோகமாகவும்,
பாதாளத்தில் ஊற்றாகிறது,
வேதனை மிஞ்சி !
துக்கங்கள்,
நகைப்பிடச் சம்ப வங்களாய்
மக்களின்
இல்லங்களில் நிகழும் !
அதுவே தான்
என் கவித்துவ நெஞ்சில்
பாகாய் உருகி ஓடும்
பாடல்களாய் !
 

*****************

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment