Sunday, January 31, 2010

[தமிழமுதம்] ஜெயமோஹன் என்றொரு கரையான் புற்று

ஜெயமோஹன் என்றொரு கரையான் புற்று
===========================================ருத்ரா

வால்மீகம் என்றால்
கரையான்புற்றிலிருந்து பிறந்த..
என்ற அர்த்தம்.
அப்படிப்பிறந்த‌
வால்மீகி வேடனுக்கு
நாரதர் ராம காதையை ஓதுகிறார்.
அவன் என்னத்தைக்கண்டான்.
மரா மரங்களும்
குரா மரங்களும் தான் தெரியும்.
மரா மரா என்று சொல்லிக்கொண்டேஇரு
ராம ராம என்று
ராமாயணம் எழுதிவிடுவாய் என்று
ராம காவியத்தை
படைக்கவைத்துவிட்டார்.
இதே போல‌
தமிழை அழிக்கவென்றே
தோன்றிய கரையான் புற்று தான்
ஜெய‌மோக‌ன்.
ச‌ம‌ஸ்கிருத வெறியூறிய‌
ம‌லையாள‌த்தை
கையில் கொடுத்து
நாரதர்
தமிழை அமிழ்த்து அமிழ்த்து
என்ற‌ சொல்ல‌ச்சொன்னார் போலும்.
அத‌னால் தான்
அவ‌ர் த‌மிழ் த‌மிழ் என்று
சொல்லியே
அது அமிழ் அமிழ் என்று ஆகி
அமிழ்த்தி அழிக்கும்
இல‌க்கிய‌ப்ப‌ணியை மேற்கொண்டுள்ளார்.
ப‌ண்பான‌ நாஞ்சில் நாடு
அவருக்கு
த‌மிழை அழிக்கும் ந‌ஞ்சு நாடு.
அவ‌ரைத்தவிர
இங்கு
யாருமே எழுத்தாளர் இல்லையாம்.

ச‌ங்க‌த்த‌மிழ் அந்த‌ண‌ர்க‌ள்
ச‌ங்க‌த்த‌மிழ் வ‌ள‌ர்த்த
செந்த‌ண்மை பூண்டு ஒழுகின‌ர்.
இவரது அந்த‌ண‌ர்க‌ளோ
ச‌ங்க‌த்த‌மிழின் ச‌ங்கு நெரிக்கும்
வெறியோடு அலைகின்ற‌ன‌ர்.
"காவி"யின் காவிய‌த்தால்
த‌மிழின் ஆவியைப்ப‌றிக்க‌
த‌கிடு த‌த்த‌ங்க‌ள்
செய்ய‌ முனைந்து விட்ட‌ன‌ர்.
க‌ரையான் புற்று
செம்மொழியை சேத‌ப்ப‌டுத்துமுன்
செந்த‌மிழ் சிங்க‌ங்க‌ளே
சீறி வாருங்க‌ள்.

============================================

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

1 comment: