மதநூல்களில் மேலாண்மையை தேடும் அன்பர்கள் முதலில் தேட வேண்டியது மனிதாபிமானத்தை.........
சொத்துக்காக, பதவிக்காக.........குடும்பத்தை, ஊரை, மக்களை அழிக்க தூண்டும்................கண்ணன் எம்.பி.ஏ படிச்சார என்ன?
பெங்களூரு:பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்லூரியில், பகவத் கீதை பாடத்தை போதிக்க திட்டமிடப் பட்டுள்ளது.பெங்களூரில் இந்திய மேலாண்மை கல்லூரியில் (ஐ.ஐ. எம்.பி.,) வர்த்தக மேலாண்மையும், பண்டைய அறிவு சார்ந்த மாற்று முறையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஐ.ஐ.எம்.பி., தலைவரும், பேராசிரியருமான மகாதேவா குறிப்பிடுகையில், "மேலாண்மை படிப்புக்கு தேவையான விஷயங்கள், பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, மேலாண்மை பாடத்தில் பகவத் கீதையை சேர்ப் பது குறித்து வல்லுனர்களின் கருத்தை கேட்டுள் ளோம்.பகவத் கீதையில் எந்தெந்த பகுதியை பாடத் திட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து வல்லுனர்கள் கருத்து தெரிவித்த பின், பகவத்கீதையை பாடமாக போதிக்க திட்டமிட்டுள்ளோம்'என்றார்."பல நூறு ஆண்டுகளுக்கு முன், பகவத் கீதையில் கூறப் பட்ட விஷயம் இன் றைய மேலாண்மை நிர்வாகத்துக்கும் பொருந்தும் படியாக உள்ளது. எனவே, பகவத் கீதையை பாடதிட்டத்தில் சேர்க்கலாம் என, இந்த கருத்தரங்கில் பேசிய பலரும் வற்புறுத்தினர்
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19872
~காமேஷ்~
மதம் சார்ந்த புத்தகங்களிலிருக்கும் கருத்துக்களை பாடத்தில் சேர்த்தால் பிரச்சனைகள் வருமே ?
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment