Sunday, December 20, 2009

[தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] அரசனின் வேர் ராஜனா?

On Dec 19, 10:07 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> அரசமரம் என்றால் மரங்களுக்கு அரசன் என பொருள்.

அரைசு என்னும் மரப் பெயர் தொல்திராவிடச் சொல்.
அம்மரத்தின் தமிழ்ப் பெயர் இந்தோ-ஐரோப்பியச் சொல் அன்று.
மொழியியல் அறிஞர்கள் குறிப்பு கொடுத்துள்ளேன்.

மரங்களின் பழைய பெயர்கள் திராவிடத்தில் இருந்து
சம்ஸ்கிருதம் ஆகியுள்ளன. உதாரணம். ஆல் (யால்- தொங்குதல்,
யானை என்பதன் மூலம் அஃதே) விழுதுகளுக்கு தமிழில்
வடம் (< வளை) என்று பேர். வடம் என்னும் திராவிடச் சொல்
சம்ஸ்கிருதம் ஆனது (வடவிருக்‌ஷம்) ....

நா. கணேசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment