நண்பர் சாதிக்,/// நாம் மதிக்கும் பெரியவர்களை பொதுச் சபையில் சட்டையைப் பிடித்திழுக்கும் அவமானத்தைச் செய்வதை விட நீங்கள் சொல்வது போல் சிறிது காலம் ஒதுங்கி இருப்பது நலம். ///////// பெரியவர்களிடம் மன்னிப்பைக் கேட்டு வாங்குதல் நல்ல பண்பல்ல. உதாரணத்திற்கு நமது அம்மா, அப்பா ஒருவேளை தவறாக பேசிவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று வம்பாக கேட்டு அவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள் என்றால் அதற்குப் பின் உறவு சீராக, நலமாக இருக்குமா? அப்படி அவர்கள் மன்னிப்புக் கேட்பது நமக்கும் கேவலமில்லையா? ///பெரியவர் முன்னிலையில் நமது பெண்டிர் எல்லாம் கீழ்ச் சாதியா ? அல்லது இரண்டாம் வகுப்புக் பிறவிகளா ?<< அன்புடனில்>> யார் யார் பெரியவர் ? யார் யார் சிறியவர் ? பெண்கள் தனி வகுப்பா ? ஏன் இந்த பிரிவினை உணர்ச்சி ?பெரியவர் அவமதித்தால் சிறியவர் புகார் செய்தல் கூடாதா ?சிறியவர் புண்பட்டால் பெரியவர் கவலைப் பட மாட்டாரா ?
சி. ஜெயபாரதன்++++++++++++++++++++++++++++++2009/12/21 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
21 டிசம்பர், 2009 12:28 pm அன்று, சாதிக் அலி <sadeekali@gmail.com> எழுதியது:
குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்மிகைநடி மிக்கக்கொளல்.என்னங்க இங்க எதுக்கெடுத்தாலும் மன்னிப்பு, பொது மன்னிப்பு என்று மிரட்டுகிறார்கள். இங்கே நடப்பது அரட்டை. அது ஆரோக்கியமாக இருத்தல் அவசியம்.யாராவது டிராக் மாறி பயணித்தால் உடன் பயணிக்கும் யாரும் அந்த எல்லை மீறுவதை சுட்டிக் காட்டுங்கள் போதும்.மிக மோசமாக ஒருவர் உரையாடினால் அவரை குழுமத்திலிருந்து நீக்கலாம் அல்லது நாங்கள் இவ்விழையை புறக்கணிக்கிறோம் என்ற ஒற்றைச் சொல்லில் எல்லோரும் அவ்விழைக்கு மூடுவிழா நடத்தி விட்டு வெளிநடப்பு செய்யலாம்.மன்னிப்பு என்னங்க. அவர் மன்னிப்பு கேட்கனும் இவர் மன்னிப்பு கேட்கனும் என்று சொல்பவர்களே எத்தனையோ இழைகளில் அத்துமீறி வரம்புமீறி விமர்சிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.பொதுவாக எல்லோரும் இங்கே ஓரளவு படித்த நாகரீகமுள்ளவர்கள் தாம். இன்னொருவர் மனம் புண் படாதவாறு உரையாடுதல் அவசியம்.தனிப்பட்ட முறையில் யாரையும் இகழ யாருக்கும் உரிமையில்லை. மற்றவர் மதத்தை, கொள்கையை கேவலப்படுத்தாமல் பழகனும், இது மிகவும் அவசியம்.மன்னிப்பு எல்லாம் யாரும் யாருக்கும் கேட்க வேண்டாம். அது நம்மிடையே உள்ள அன்னியோன்யத்தை கெடுத்துவிடும்.ஒரு குடும்பத்தை வேறறுத்த ஒரு கொலையாளிக்குக் கூட மரணதண்டனை கொடுக்கக் கூடாது. அவனுக்கு திருந்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று இரக்க சிந்தனையில் வாதாடும் மிக்கப் பண்பில் மிகைத்த எனதன்பு சகோதர் சகொதரிகள் இவ்வளவு கோபம் மிகைக்க வேண்டியது அவசியம் தானா?தவறுதல் என்பது மனித இயல்பு. நம்முடைய எந்தப் பேச்சு அப்படி எதிர்மறையான கருத்து வரக்காரணமாக அமைந்ததை அலசி இனி அது போல் நிகழாமல் நம் தரப்பை நாம் சீர் செய்வோம்.பெரியவர்களிடம் மன்னிப்பைக் கேட்டு வாங்குதல் நல்ல பண்பல்ல. உதாரணத்திற்கு நமது அம்மா, அப்பா ஒருவேளை தவறாக பேசிவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று வம்பாக கேட்டு அவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள் என்றால் அதற்குப் பின் உறவு சீராக, நலமாக இருக்குமா? அப்படி அவர்கள் மன்னிப்புக் கேட்பது நமக்கும் கேவலமில்லையா?நன்றல்லது அன்றே மறப்பது நன்று... இதைத் தான் வள்ளுவர் கற்றபின் நிற்க அதற்குத் தக என்றார்.
சாதிக் சொல்லியவற்றில் இது வரைக்கும் நான் முழு உடன்பாடு கொள்கிறேன்You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment