Monday, December 21, 2009

[தமிழமுதம்] Re: ஓலை நுறுக்கில் ஒரு புத்தாண்டு வாழ்த்து.........ருத்ரா..

அன்புள்ள வேந்தன் அரசு அவர்களுக்கு

புனிறு என்னும் சொல் "அப்போது தான் பிறந்த" என்ற உணர்வினையும்
சங்கப்புலவர்களின் பாடல்களில் நிறைய இடங்களில் நிரவல் செய்து இருக்கிறது.

ஐங்குறுநூறு (செய்யுள் 25) மருதத்திணைப்பாடல் ஒன்றில் "ஓரம் போகியார்"
இவ்வாறு எழுதியிருக்கிறார்.

"அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்
வயலைச் செங்கொடி களவன் அறுக்கும்"


மனையின் பக்கத்தே உள்ள புதிதாய் காய்த்த "பச்சைக்காயுடன்" தரையில்
படர்ந்து கிடக்கும் செவ்விய வயலை எனும் கொடியை நண்டுகள்
அறுத்துப்போட்டு விடும் என்ற பொருளில் அந்த ஐங்குறுநூறு பாடலை
எழுதியிருக்கிறார்.எனவே புனிறு என்ற அழகான சொல் நம் தமிழ்க்கருவூலத்தில்
இருப்பது கண்டு நமக்கு வியப்பும் மகிழ்ச்சியும் பெருகுகிறது

அன்புடன்
ருத்ரா

On Dec 20, 7:47 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 20 டிசம்பர், 2009 5:57 pm அன்று, ருத்ரா (இ.பரமசிவன்)
> <epsi...@gmail.com>எழுதியது:
>
> "புனிற்று இள‌ம்"
>
> புனிறு  - ஈன்ற அண்மை
>
> --
> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி
> (வள்ளுவம் என் சமயம்)
> "உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment