Monday, December 21, 2009
[தமிழமுதம்] தவறான சிகிச்சை
சிவகங்கை : தவறான சிகிச்சை அளித்ததால் மாணவர் இறந்ததாக கூறி சிவகங்கை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் முத்துராஜா(19). சிவகங்கை அரசு மன்னர் கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த 11ம் தேதி ராமநாதபுரத்தில் நடந்த போலீஸ் தேர்வில் கலந்து கொண்டுவிட்டு சிவகங்கை திரும்பினார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யும்படி டாக்டர்கள் கூறினர். அதன்படி முத்துராஜாவுக்கு ரத்த பரி சோதனை செய்யப்பட்டது. தவறுதலாக பரிசோதனை செய்ததால் முத்துராஜாவின் ஒரு கை செயலிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் முத்துராஜா மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து முத்துராஜாவின் பெற்றோர் கூறியது: சிவகங்கை அரசு மருத்துவமனையில் எனது மகனுக்கு ரத்த பரிசோதனை செய்தது செவிலியர் பயிற்சி மாணவிகள். அந்த மாணவிகள் முறையாக ரத்தம் எடுக்காததால் நரம்பு வழியாக காற்று உள்ளே புகுந்துள்ளது. இதில்தான் எனது மகனின் ஒரு கை செயலிழந்தது. தவறான சிகிச்சையால்தான் எனது மகன் இறந்துள்ளான். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மாணவர் முத்துராஜா இறந்த சம்பவம் சிவகங்கை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஊர்வலம் செல்ல தயாரானார்கள். தகவலறிந்து கலெக்டர் மகேசன்காசிராஜன் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சு நடத்தினார்.
தவறான சிகிச்சை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் ஊர்வலத்தை கைவிட்டனர்.
http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=2609
~காமேஷ்~
முழுமையாக பயிற்சி பெறாதவர்களை ஏன் சிகிச்சை அளிக்க அனுமதிக்கனும் ?
அந்த மாணவிகளுக்கு என்ன தண்டனை தரமுடியும் ?
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment