விடுமுறை நாட்களில் எனக்கு புதிய கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன.. அதிலே மிக முக்கியமானது சனிக்கிழமை காலையிலே அங்காடிக்கு காய், கனி வாங்கச் செல்லும் என் இல்லாளுடன் செல்ல வேண்டும்..
எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு பிரபலமான அங்காடிக்குத் தான் இல்லாள் செல்வாள் என்பது எனக்குத் தெரியுமாதலால் , இந்தக் கடமையை ஏற்கத் தயங்கினேன்.
காரணம் அந்தக் கடையிலே நான் பார்த்த வரையில் அதிகம் பெண்களே காய் வாங்க வருவார்கள்.. ஆண்கள் அபூர்வமாகவே காணலாம்..
"இதென்னங்க வம்பாய் இருக்கிறது.. லீவு நாளிலே அந்தக் காய் போட்டு சாம்பார் வை.. இந்த காயை வதக்கி வை.. அந்தப் பழம் வாங்கியிருக்கலாம் என என்னை சாடுகிறீர்கள்.. வந்தால் தான் ஆச்சு"
இந்த வாதத்திற்கு பதில் வாதம் செய்ய இயலவில்லை என்பதை ஒப்புக் கொண்டேன்..
ஆனாலும் என்னை ஒரு தொலைபேசி அழைப்பு ரட்சித்தது.. கடை வாசலில் வண்டியை நிறுத்திய உடன் ... என் சகா அழைத்தார்...
"நீ கடைக்குள் போய் வாங்கிட்டு இரும்மா.. நான் பின்னாலேயே வருகிறேன்"
மிக சொற்பமான நேரத்திலேயே அந்த தொ.பே உரையாடல் நிறைவுற்றாலும் நான் கடைக்குள் செல்லவில்லை..
அந்த வட்டார வாராந்திர செய்தி ஏடான mambalam times பிரதி ஒன்றை என்னிடம் திணித்துவிட்டுப் போனான் ஒரு சிறுவன் ( இந்த மாதிரி வாரம் ஒரு தரம் நியூஸ் பேப்பர்கள் இலவசமாக கிடைப்பதில் சந்தோஷம்)
அதிலே ரா.கி ரங்கராஜன் நாலு மூலை என ஒரு பகுதி எழுதுகிறார்..
ஆதாமையும் ஏவாளையும் பற்றி ஒரு விவாதம் நடைபெற்றது.. அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற கேள்வியின் போது இங்கிலாந்துக்காரன் சொன்னான்: பெண்ணுக்கு முன்னுரிமை எனும் பண்பாட்டுடன் ஆப்பிளை ஏவாளுக்குக் கொடுத்தான் ஆதாம்.. ஆகவே அவர்கள் ப்ரிடிஷார்
பிரெஞ்சுக்காரன் சொன்னான்: பெண்களை வசியப்படுத்துவது எப்படி என ஆதாமுக்கு தெரிந்திருந்தது.. அந்தக் கலை ப்ரெஞ்சுக்காரர்களுக்கு மட்டும் தான் தெரியும்.. ஆகவே அவர்கள் ப்ரெஞ்சு தேசத்தவரே
ரஷ்யாக்காரன் சொன்னான்: உடுத்த உடை இல்லாமல், தின்பதற்கும் ஆப்பிள் மட்டுமே இருக்க ஆனால் தாங்கள் சொர்க்கத்தில் இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள் ஆகவே அவர்கள் ரஷ்யரே
இதைப் படித்துக் கொண்டு இருக்கும் போது என் இல்லாள் கடையிலிருந்து கைகள் இரண்டிலும் பளுவான பைகள் தாங்கி வருவதைக் கவனித்தேன்
காரிலிருந்து வேகமாக இறங்கி தாவி ஓடி அவளை நெருங்கி
"அய்யோ ஐம் சாரிம்மா.. அந்த போன் கால் முக்கியமான கால்... இப்ப தான் வச்சான்.. உள்ளே வரலாம்னு நினைப்பதற்குள் நீ பர்ச்சேஸ் முடிச்சிட்டு வந்திட்ட"
"அதனாலே என்னங்க... பரவாயில்லை"
நிஜமாகவே சமாதானம் ஆய்ட்டாளா
நான் ப்ரெஞ்சு தேச்த்து வாசனை திரவியங்கள் விரும்பி பயன்படுத்துவதில் ஏதேனும் பயன் இருக்குமோ ??
நபெ
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment