உலங்கின் விசிறிகளாய் சுழன்று சுழன்று
மென்மையாக தரையிறங்கும்
அமைதியான முடிவுகள்
அருவியாக தரையிறங்கி
ஏரி குளம் நிரப்பி
மக்கள் தாகம் தீர்த்து
கடல் சேரும் ஆறுகளின்
அழகான முடிவுகள்
தென்னை பனை ஓலைகள்
பழுத்தும பந்தம நீங்காது
சலசலத்து இழுத்து கொண்டிருக்கும்
விழும் போதும் நிலம் அதிரும்
கோரமான முடிவுகள்
முடிவுகளில் கூட அழகு வேண்டுமென்று
நீ என் காதலை இதமாய் மறுத்த போது
என் காதல் காற்றிழந்த பலூனானது
வன்மையோ மென்மையோ
முடிவுகள் முற்றுபுள்ளிகள்தானே
கண்களில்
http://manimalar.wordpress.com/2009/12/23/முடிவுகள்-முற்றுபுள்ளிக/
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment