Tuesday, December 22, 2009

[தமிழமுதம்] ஒற்றை செருப்புகள்

தொடர்வண்டி பாதையின்
நெடும் பயணத்தில் ஆங்காங்கே
இருப்பு பாதைகளில்
சில ஒற்றை செருப்புகள் கிடக்கின்றன

பயணிகளின் காலிருந்து தவறி
விழுந்தவைகளாக இருக்கலாம்
விழுந்து விட்ட ஏதோ ஒன்றின் இணையாக
அடுத்தவருக்காவது பயன் படட்டுமென
விடப்பட்டதாககூட இருக்கலாம்
தொடர்வண்டியில் அடிப்பட்டு
இறந்தவரின் உடமையாககூட இருக்கலாம்

சிலநட்டங்கள் பெரும இழப்புகளின்
ஞாபக சின்னங்களாய்
இருப்புபாதையில் கிடக்கின்றன

இணையாக இரண்டு செருப்புகள்
அருகருகே கிடந்தாலும்
அவற்றில் ஒன்று பிய்ந்துதானிருக்கும்

அப்படிபட்ட செருப்புகள் எல்லாம்
எழும்பூர் நடைமேடை ஒரத்திலொரு நாள்
வெயிலில் கூட்டமாக குளிர் காய்ந்து கொண்டிருந்தன
அதனருகில் அமர்ந்திருந்த ஏழைபெண்ணின்
வயிற்று பசி போக்க மகிழ்ச்சியுடன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment