Monday, December 21, 2009

[தமிழமுதம்] ஒரு பெரிய கும்பிடு!

நான் இப்பொழுதெல்லாம் எங்கும் எழுதுவதில்லை. காரணம், எனது கருத்துக்கள்
இன்றைய காலகட்டத்துக்கு இயைபுடையன அல்ல என்று அனுபவத்தில் உணர்ந்து
கொண்டுள்ளதால், சம்பாசணைகளைப் படித்து பல்வேறு கருத்துக்களை அறிந்து
அசைபோட மாத்திரமே முயல்கிறேன்.

இக்குழுமம் துவங்கி இன்னும் ஓராண்டும் நிறைவுறாத நிலையில் இங்கு அடிக்கடி
நிகழும் அக்கப்போர்களும், அனாவசியமான போட்டாபோட்டிகளும், அவ்வப்போது கீழே
விழுந்து நொறுங்குகிற கண்ணியமும் இந்தக் குழுமம் போகிற திசையை நன்றாகப்
புலப்படுத்துகிறது.

சொல்லாமலே போயிருக்கலாம்; ஆனால், சொன்னால் எவர் ஒருவருக்காவது கொஞ்சமாவது
உறைக்காதா என்ற ஒரு நப்பாசை! காழ்ப்புணர்ச்சியின் முடைநாற்றம் வீசுகிற
உங்களது குழுமத்திலிருந்து கிளம்பி விட்டேன்.

என்னை அழைத்த சாந்தி அவர்களுக்கு நன்றி!

வாழ்க வளமுடன்.

குருமூர்த்தி

*************************************************************************
மெய்யின் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளுமிவ்
வையந்த் தன்னோடு கூடுவதில்லை யான்
**************************************************************************

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment