அன்புள்ள விஜய்க்கு.. Posted: 20 Dec 2009 09:18 PM PST வணக்கம். இந்தக் கடிதத்தை எழுதும் இந்த நிமிடம் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீங்கனு தெரில.ஒரு வேளை உங்களை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டங்கள் உங்களை உசுப்பேத்தி சந்தோஷப்படுத்தலாம். வேட்டைக்காரன் தியேட்டர் வாசலில் கூடுற கூட்டம் உங்களை பிரமிக்க வைக்கலாம். ஆனால், அதையும் மீறின ஒரு நேசத்துடனே இந்தக் கடிதம் பயணப்படுகிறது.சமீபகாலமாக உங்களை பற்றிய நிறைய கிண்டல்கள் குறுந்தகவல்களாய் உலா வருகின்றன. உங்கள் மொபைலுக்கு கூட தவறுதலாய் இது பார்வர்ட் செய்யப்பட்டிருக்கலாம்.சன் பிக்சர்ஸ் வேட்டைக்காரனை வாங்கியிருப்பதால் இது 50 நாள் படமாக அமையும். ஆனால் விஜயின் வெற்றி? என்ற கேள்வி உங்களுக்கே எழும். ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்தவர் நீங்கள். உங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டப் பிறகு அடுத்தக் கட்டத்தை நோக்கி நகராமல் வெறும் பன்ச் வசனங்களை மட்டும் நம்பிக் கொண்டிருப்பது உங்களுக்கு சங்கடத்தை அளிக்காத்து தான் ப்ரச்னையே. கமர்ஷியல் ஹீரோவுக்கு இதையும் தாண்டி செய்ய ஒன்றுமில்லை என்று நிர்ணயம் செய்து கொள்வதே தமிழ் சினிமாக்களின் ப்ரச்னையாக இருக்கிறது. யோகி படத்தையே கமர்ஷியலாக கையாளக்கூடிய வாய்ப்புகள் இருக்கு விஜெய்.அதில் நீங்கள் பிரமாதமாக பொருந்தவும் செய்வீர்கள்.உங்களுக்கு அடுத்து வந்த ஜீவாவும் ஜெயம் ரவியும் கூட இது பற்றி யோசித்து வெவ்வேறான படங்களைத் தேர்வு செய்யும் போது நீங்கள் ஏன் அதை செய்யத் தவறுகிறீர்கள்? உங்களுடன் இருக்கும் ஜால்ரா கூட்டமா? இல்லை இதுவே என் எல்லை என்று நீங்களே உங்கள் திறமைக்குப் போட்டிருக்கும் லெக்ஷமணக் கோடா? வேட்டைகாரன் படம் முடிந்து வெளியே வரும் போது உங்களிடம் பேசத் தோன்றியது. என் பையன் உங்கள் ரசிகன். நல்லவேளை அவரு பையனை முதல்லயே ஆட வச்சிட்டாரு ..இல்லீனா யாரு பாப்பங்கனு சொன்னது யாரா இருக்கும்? படம் ஆரம்பிக்கும் முன்னால இளைய தளபதி வாழ்கனு கோஷம் போட்ட ஒரு பையன். இநதியா டூடே பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு விடயம் தெளிவாக ஆனந்த் நடராஜன் சொல்லியிருந்தார்.உங்களுக்கே உஙகள் முன் பரந்து கிடக்கும் வெளி புலப்படலையோனு தோணுவதைத் தடுக்க முடியவில்லை.ஆறிலிருந்து அறுபது வரை மக்களை வசியப்படுத்தி வைப்பது சாதாரண விடயமில்லை. ஆனால் அதை தக்க வைக்கும் பொறுப்பு மட்டுமல்ல.அவர்களையும் ரசனையின் அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் முயற்சிகளில் ஈடுபடுவதும் உங்கள் பொறுப்பு தானே? அதற்காக நான் உங்களி ஆர்ட் ஃப்லிம் நடிக்க சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பேராண்மை சமீபத்திய உதாரணம். படம் பார்த்த் சாமன்யன் கூட பிரமிக்கும் அறிந்து கொள்ள விடயங்கள் அதில் இருந்தன. ஈடி கூட ரேயின் கதை தான் என்று ஒரு கதை உண்டு. உங்கள் கூட்டை விட்டு வெளியே வாருங்கள். அரசியல் அபிலாஷைகளில் விஜயகாந்தின் இழப்புகளை கவனியுங்கள்.சினிமா தளத்தில் இன்னும் சாதிக்கவே நிறைய இருக்கும் போது எதற்காக இன்னுமொரு புதுதளத்தின் தலைவலிகளை சமாளிக்க வேண்டும். இது பகவதி படம் மாதிரி இருக்கு..இது திருப்பாச்சி மாதிரி இருக்குனு யாராச்சும் உங்களிடம் சொன்னார்களானால் கோபப்படாதீர்கள். இன்னொன்று போல் ஒன்றை உருவாக்க இன்னும் விஜய் எதற்கு? புதிதாய் களம் இறங்குங்கள்.அவகாசம் எடுத்துக் கொள்ளுஙகள்.உங்களை யாரும் மற்க்க மாட்டார்கள். காத்திருப்பார்கள். மிகுந்த அன்புடன், தமயந்தி |
--
நட்புடன்
மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/http://charlessmiles.blogspot.com/ சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment