சென்னை, டிச. 10: சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதற்கான
தமிழக அரசின் நடவடிக்கைகள் ஆங்கில வழி கல்விக்கு அதிக முக்கி
யத்துவம் தருவதாக உள்ளன என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்
றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அ னைத்து குழந்தைகளும் ஒரே விதமான கல்வி முறையில் பயில வேண்டும்
என்ற நோக்கிலான சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த, தமிழக அரசு
சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆனால் கல்வியை தனியார் மயம், வணிக மயமாக்கும் ஆங்கில வழியிலான
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசின் நடவடிக்
கைகள் அமைந்துள்ளன.
பெரும்பாலான மாணவர்கள் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ்,
தமிழ் வழிக் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் நான்கில் ஒரு பகு
திக்கும் குறைவானவர்களே ஆங்கில வழி கல்வி நிலையங்களில் படிக்
கின்றனர்.
வசதி படைத்தவர்கள், சமுதாயத்தில் மேல்தட்டில் இருப்பவர்க
ளின் குழந்தைகள்தான் ஆங்கில வழி, கட்டணப் பள்ளிகளில் படிக்
கின்றனர்.
அனைவ ருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கும் சமச்சீர் கல்
வியை நடைமுறைப்படுத்துகிறோம் என்று அரசு அறிவித்தது. ஆனால்
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு பயன்பட்டு வரும் கட்
டணப் பள்ளிகளும், ஆங்கில பயிற்று மொழியும் தொடர்ந்து நீடிக்கும்
என்று அறிவித்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது.
அரசியல் சட்டத்திற்கும் எதிரானது. 6 முதல் 14 வயது வரையிலான
எல்லா குழந்தைகளுக்கும் கட்டாய, இலவச கல்வி அளிக்க வேண்டும் என்
பது சட்டம்.
ஆனால், ஆங்கில வழியிலான கட்டணப் பள்ளிகள் நீடித்து வரும் நிலை
யில், அனைவருக்கும் இலவசக் கல்வி என்பது எவ்வாறு சாத்தியமா
கும்?
ஆங்கில வழிக் கல்விக்கு ஆதரவான கருத்துகளை முதல்வர் கருணாநிதி
யும் தெரிவித்துள்ளார்.
இது வேதனை அளிப்பதாக உள்ளது.
அண் ணாவின் இருமொழிக் கொள்கையே எங்களது கொள்கை என்று அறிவித்
துள்ள கருணாநிதி, இருமொழிக் கொள்கையில் இடம்பெறாத ஒரு கருத்து
திணிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
தாய் மொழியில் மட்டும் சமச்சீர் கல்வியை கொண்டு வருவதன் மூலம் எந்த
அளவுக்கு பயன்பெற முடியும் என்பதை சிந்தித்து முடிவெடுக்க வேண்
டும் என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.
இதன் மூலம் ஆங்கில வழியில் கல்வி கற்றால்தான் வேலை கிடைக்கும்;
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்று கட்டணப் பள்ளிகள்
நடத்துவோர் செய்யும் பொய் பிரசாரத்துக்கு முதல்வர் கருணாநிதி
வலிமை சேர்த்திருக்கிறார்.
ஆங் கில வழி பயிற்று மொழி என்பது இடையில் வந்தது. அதற்கு முன்பு
தமிழ் வழிப் பள்ளிகளிலேயே பெரும்பாலானோர் படித்தனர். அவர்கள்
அறிஞர்களாக, மேதைகளாக, அரசு உயர் அதிகாரிகளாக, மருத்து
வர்களாக, விஞ்ஞானிகளாக, சிறந்த நிர்வாகிகளாக உயர்ந்தி
ருக்கிறார்கள்.
எனவே, ஆங்கில வழிக் கல்வியை கற்றால்தான் பயன்பெற முடியும் என்ப
தெல்லாம் வெறும் மாயை. இந்த மாய வலையில் தமிழக அரசு சிக்கிவிடக்
கூடாது.
தமிழ் செம்மொழி மாநாடு நடத்த இருக்கும் இந்த தருணத்தில், தமிழக
பள்ளிகள் அனைத்திலும் தமிழே பயிற்று மொழி என்ற அறிவிப்பினை முதல்
வர் கருணாநிதி வெளியிட வேண்டும். இதன் மூலம் நமது கல்வி முறையில்
இப்போதுள்ள ஏற்றத்தாழ்வை போக்கி, சமூக நீதியை நிலைநிறுத்த முன்
வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment