Sunday, December 20, 2009

[தமிழமுதம்] க(தை)விதை : விதைத்ததே விளையும்...! /துரை. ந. உ


விதைத்ததே விளையும் :

 
மெல்லியப் பூக்களைப் பறித்து

சாலையில் வெயிலில் விரித்து

அதன்மேல் நடந்தாலும்

அவள்பாதம் நோகுமென்று

என்பாதத்தின் மேலேற்றித்

தொடர்ந்தேன் பயணம்.......

 

காலத்தின் ஓட்டத்தில்

பாதையும் , ஓரமும்

கல்லும் முள்ளுமாய் மாற

நான் பழக்கிவிட்ட அந்தப்

பயணமுறை மட்டும்

மாறாமல் தொடர்கிறது......

 

குருதி தோய்ந்த எனது

காலடித் தடங்களை பார்த்து

கேலிசெய்து கொண்டிருக்கின்றன

 

பாதையின் ஓரத்தில்

சருகாய்க் காய்ந்து கிடந்த

அந்தப்பூக்கள் .
 
 
 
( நன்றி ;கரு/தணி)
--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்'     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment