Thursday, February 18, 2010

[தமிழமுதம்] Re: புது மானிடன் நீ!

ஆமாங்க, எழுத்துப் பிழை ஆயிடிச்சி!

On Feb 18, 2:48 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> போ பாட்டி! எனக்கு நாளைக்கு பள்ளிக்கூடம் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுடவா?"
> //
>
> நல்லாத் தான் கேட்டிருக்கான் பேராண்டி, இருந்தாலும்* கொல்லி*, என்பது
> *கொள்ளி*என்று வந்திருக்கணுமோ?????
>
> 2010/2/18 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>
>
>
> > புது மானிடன் நீ!<http://maniyinpakkam.blogspot.com/2010/02/blog-post_17.html>
> >  *ஒவ்வொரு நாளும்
> > புது மானிடன் நீ!
> > *நேற்றைய முடத்தை
> > இன்று நீக்கவல்ல
> > புது மானிடன் நீ!!
>
> > ஒவ்வொரு நாளும்
> > புது மானிடன் நீ!
> > வாய்த்த மொழியை
> > கட்டிய பண்பாட்டை
> > மெருகேற்றப் பிறந்த
> > புது மானிடன் நீ!!
>
> > ஒவ்வொரு நாளும்
> > புது மானிடன் நீ!
> > தவிப்புக்கு நீராய்
> > இழப்புக்கு மாற்றாய்
> > மலர வந்த
> > புது மானிடன் நீ!!
>
> > ஒவ்வொரு நாளும்
> > புது மானிடன் நீ!
> > அறம் காக்கவும்
> > மனிதம் போற்றவும்
> > ஒளியூட்ட வந்த
> > புது மானிடன் நீ!!
>
> > ஒவ்வொரு நாளும்
> > புது மானிடன் நீ!
> > முன்னைப் பழம்
> > காத்துச் செழித்து
> > புதுமை ஆக்கவந்த
> > புது மானிடன் நீ!!
>
> > *ஒவ்வொரு நாளும்
> > புது மானிடன் நீ!*
> > நேற்றைய முடத்தை
> > இன்று நீக்கவல்ல
> > புது மானிடன் நீ!!
>
> > என்னங்கடா ஆயத்தக்கூறுக(build-up) எல்லாம் வலுவா இருக்கேன்னுதான மண்டையச்
> > சொறியுறீங்க? காரணம் இருக்குது இராசா, அதுல ஒரு காரணம் இருக்கு! ஒவ்வொரு
> > நாளும், நாம எல்லாருமே, 'புதுசு கண்ணா புதுசு'தாங்க!
>
> > நேற்றைய தவறுகள் இன்றைய பாடம்; நேற்றைய வழுக்கள் இன்றைய மேம்பாடுகள்! இன்றைய
> > ஆக்கங்கள், நாளைய சாதனைகள்!! ஆகவே, ஒவ்வொரு நாளும் புது மனிதனாய் மேன்மையத்
> > தேடிப் போய்கிட்டே இருப்போம் வாங்க. சரிதானுங்களே நாஞ்சொல்றது??
>
> > ஆமாங்க! ஊர்ல இருந்து வரும்போது நிறைய அனுபவங்கள், சிந்தனைகள், நினைவுகள்னு
> > பலதும் மனசுல ஏத்திட்டு வந்திருக்கேன். அதுகளைப் பத்தி எழுதினா, தினமும், இடுகை
> > ஒன்னு போட்டுட்டே இருக்கலாம். ஆனாலும், புது மனுசனா நெனச்சுச் செய்ய வேண்டிய
> > பணிகள், தினமாக ஆக சேர்ந்துட்டே இருக்குங்க. அதனால, இடுகைகள் போடுறதுல ஒரு
> > வெட்டாப்பு! இஃகிஃகி!!
>
> > "*மணிவாசகம்*ன்னு பேர வெச்சிகிட்டு, இன்னமும் *திருவாசகம்* முழுமையாப்
> > படிக்காம இருக்கியேடா? உனக்கெல்லாம் தினம் ஒரு இடுகையா??" அப்படின்னு கெழுதகை
> > நண்பர் ஆரூரன் விசுவநாதன்<http://www.blogger.com/profile/18121800767632927217>நினைச்சாரா, இல்லையான்னு எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, அவர் ஒலி, ஒளிக்
> > கோப்புகளோட ஒரு புத்தகங் கொடுத்தாரு. அதுல அறுபது பக்கம் மட்டுமே படிச்சி
> > முடிச்சிருக்கேன். மீதம் இருக்கிற முந்நூற்றைம்பது பக்கமும் படிச்சு
> > முடிக்கணுமுங்க!
>
> > எதிர்வரும் மார்ச் பதினான்காம் திகதி, அமெரிக்கத் தலைநகர்ல தன்மானத் தமிழ்
> > மறவர், செந்தமிழ்க் காவலர் இலக்குவனார் நூற்றாண்டு விழா நடக்க இருக்கு. அதனால,
> > செந்தமிழ்க் காவலரைப் பற்றி நிறையத் தெரிஞ்சுக்க வேண்டி இருக்குங்க. கூடவே,
> > புறநானூற்று ஆய்வுச் சொற்பொழிவும் நடக்க இருக்கு, அதே விழாவுல! அதுக்காகவும்
> > ஆயத்தப்படுத்திக்க வேண்டி இருக்குங்க மக்கா! நீங்க, முடிஞ்சா மார்ச் பதினாலாந்
> > தேதி அவசியம் விழாவுக்கு வாங்க. மேலதிக விபரங்களை, அடுத்த வாரத்துல இடுகையாப்
> > போடலாம்னு இருக்கேன்.
>
> > கடைசியா, இது, உங்களுக்கு எல்லாந் தெரிஞ்ச ஒன்னுதான்! ஆமாங்க, துண்டு
> > போட்டதுல <http://maniyinpakkam.blogspot.com/2010/02/02152010.html>,
> > காரியங் கைகூடி வருதல்ல? மார்ச் ஐந்தாம் நாள், அண்ணன் சீமாச்சு கூட ஃப்ளோரிடா
> > போறம்ல?? இஃகிஃகி!!
>
> > "மவனே, அலைபேசில சொல்லாமக் கொள்ளாமப் படம் புடிக்கிற வேலையெல்லாம்
> > வெச்சிக்கப்படாது!" அப்படின்னு நிபந்தனை எல்லாம் போட்டிருக்காரு. அவர் என்னைக்கு
> > சிநேகா படம் <http://seemachu.blogspot.com/2010/02/90.html> போடுறதை
> > நிறுத்துறாரோ, அன்னைக்கு பாத்துகலாம்னு இருக்கேன் நானு. இங்க இருந்து ஃப்ளோரிடா
> > போவமா? ஒவ்வொரு தடவை படம் புடிக்கும் போதும் இவர்கிட்ட சொல்லிட்டு
> > இருக்கணுமாம்? அது முடியுமாங்க??
>
> > இது ச்சும்மா, கொசுறு:
>
> > "ஏன் பாட்டி, உனக்கு எம்மேல இவ்வளவு பாசம்?"
> > "நீதான்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!"
> > "போ பாட்டி! எனக்கு நாளைக்கு பள்ளிக்கூடம் இருக்கு! இன்னைக்கே கொல்லி
> > வச்சுடவா?"
>
> > *பணிவுடன், பழமைபேசி.*
>
> > --
> > தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
> > -- பாவேந்தர் பாரதிதாசன்- Hide quoted text -
>
> - Show quoted text -

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment