Monday, February 1, 2010

[தமிழமுதம்] Re: ரஹ்மானுக்கு இரண்டு கிராமி விருதுகள்

ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற 'ஜெய் ஹ' பாடலுக்கு இசைய அமைத்ததற்காகவும், அப்படத்தின் பின்னணி இசைக்காகவும் 2 கிராமி விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார். 

இசைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றிரவு நடந்தது.

இதில் திரைப்படத்திற்கான சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த திரைப்பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'ஸ்லம் டாக் மில்லியனர' திரைப்படம் இடம் பெற்றிருந்தது. பரிந்துரைக்கப்பட்ட 2 பிரிவுகளிலும் கிராமி விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றார். 

சிறந்த பாடலுக்கான விருது பாடலாசிரியர் குல்சார், தன்வீ ஷா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

கிராமி விருது நிகழ்ச்சி நடந்த ஸ்டேபிள்ஸ் மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "2 கிராமி விருதுகளை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சாதனை புரிய உதவிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment