ஜெயமோகன் மீதோ அல்லது மனுஸ்யபுத்திரன் மீதோ எனக்கு எந்த தனி பாசமும் இல்லை. மேலும் ஜெயமோகன் எந்த சந்தர்ப்பத்தில் மனுஸ்யபுத்திரனின் ஊனத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தார் என்பதை சரியாக யாரும் படிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
அவர் சொன்னதன் சாராம்சம் :
தன் ஊனத்தை பற்றி எழுதி தன்னிறக்கம் சம்பாதிப்பது சரியான செயலல்ல என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
அடுத்து:ருத்ராவுக்கு
நான் ஒரு இலக்கியவாதியோ அல்லது உங்களை போன்ற கவிஞரோ அல்ல. நீங்கள் தமிழிலும் இலக்கண இலக்கியங்களிலும் புலமைப்பெற்றவராக இருக்கலாம். ஆனால் மற்றவர்களை பாராட்டி எழுதுவதும் அல்லது தாக்கி எழுதுவதுமே கவிதை என நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும் உங்களிடம் பேச வேறு ஒன்றும் இல்லை.
என் வலைப்பதிவு என நீங்கள் வேறு எங்கோ பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஜோதிடம் ஆருடம் பற்றி நான் எதுவும் எழுதுவதில்லை. அதற்கும் எனக்கும் சம்பந்தமும் இல்லை. நான் உங்களை போல ஒரு எழுத்தாளனும் அல்ல கவிஞரும் அல்ல.
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment