Monday, February 1, 2010

[பண்புடன்] Re: [muththamiz] Re: கண்ணீர்த் துளிகள்...

 
பெருமிதம் 
 
உன் ஒருத்தியைத்
தவிர வேறொன்று என
நினைத்தாலே
அருவருப்படைகிறது
மனம்....
வியாழனுக்கு மட்டும்
பதிமூன்று நிலவுகளாம்...!?
தனக்கேயான ஒரே
நிலவை எண்ணிப்
பெருமிதம் கொண்டது புவி...

 
 பெருமூச்சு தான் வரும்?
 
 
மகிழ்ச்சி
 
விண்ணில் உண்டான
கருப்புப் பொத்தல் (Black hole)
உள்ளுக்குள் இழுத்து
திடீரென வெடித்துச்
சிரிக்கிறது...
புதிய கிரகங்களாய்...
உன்னைக்
கண்ட நொடிகளில்...

உங்களுக்கு கிரகம் சரியில்லையோ..?
 

மணம்..
 
என்
பிணத்திற்குத்தான்
நீ
மாலையிடுவாய் என்றால்
மறுக்கவா போகிறேன்...

காதல், கல்லறை குட் காம்பினேசன்..உங்க ரெண்டு பெயரையும் மைன்ட் ல வசிக்கிறேன்...



அறிவியலும் காதலும் கலைகட்டி கலக்கலா எழுதி இருக்கீங்க...
இந்த மூன்றும் ரொம்ப நல்லா இருக்கு செழியன் ஜி
வாழ்த்துகள்




தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment