Tuesday, February 2, 2010

Re: [தமிழமுதம்] Re: அமெரிக்கா H1B: சமீபத்திய மட்டுறுத்தலும், நுழைவு நிராகரிப்பும்!

வாழ்நாள் வேலை கொடுப்பது ஒன்றும் சிரமமில்லை.பீயள்ளும், செருப்பு தைக்கும்,கட்டிடம் கட்டும்,கோயிலில் பூசை செய்யும் தொழிலாளிக்கு முன்பு வாழ்நாள் முழுக்க நிரந்தர வேலை கிடைத்தது.தளபதிகள்,மந்திரிகளுக்கு தான் கரணம் தப்பினால் மரணம் எனும் மாதிரியான தற்காலிக வேலை.

ஜப்பானில் இந்தியாவை போலவே ஜாதி,வருணமுறை உண்டு.முதலாளியை விட்டு பிரிவது தற்கொலைக்கு சமமானது என ஜப்பானியர் கருதினர்.இரண்டாம் உலகபோரில் அத்தனை அழிவுகளுக்கு பின்னர் ஜப்பான் சரணடைந்தபோது மன்னரை கைவிட்டுவிட்டதாக கருதி ஜப்பானியர் பலர் கதறி அழுதனர்.

ஜப்பானிய கம்பனிகளில் வேலைக்கு சேர்பவர்கள் வெளியே போக மாட்டார்கள்.விற்பனை,உற்பத்தி குறியீடுகளை அடைய தவறும் ஊழியர்கள் தற்கொலை செய்து தம்மை தண்டித்துகொள்வர்.அடித்தட்டு வேலைகளுக்கே பணிநிரந்தரம்.கம்பனி நஷ்டத்தில் ஓடினால் ஒருவரை வேலைநீக்கம் செய்வதுக்கு பதில் அவரது சம்பளத்தை மற்ரவரின் ஊதியத்தில் இருந்து கழித்து கொள்வர்.ரொம்ப நஷ்டத்தில் கம்பனி ஓடினால் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டி வரலாம்.இது ஜப்பானிய கலாசாரத்தில் சாத்தியமாகும்.பிற கலாசாரங்களுக்கு ஒத்துவராது.

2010/2/2 tamil payani <tamilpayani@gmail.com>
நியாயம் என்பது சமூகத்தில் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு மாதிரி எடுத்துக்க படுகிறது.

நீங்கள் சொல்லுவது இன்றைய நியாயம்.
நான் சொல்லுவது அன்றைய நியாயம்.

புலவர் சொல்லுவது கேட்க இனிமையாக இருக்கிறது. ஆனால் எல்லா முதலாளிகளும்
இவ்வளவு புத்திசாலியாக இருப்பது இல்லை. முட்டாள்களும் நிறைந்ததே உலகம்.

2010/2/3 புலவர். அசோக் <ashokk757@gmail.com>



அது போலதான் தொழிலாளரும் மனிதரே என்ற சிந்தனை கிழக்கு உலகில் உண்டு. முற்காலத்தில் 
தன் சொந்த சொத்தை விற்று எல்லாம் சில காலம் நிறுவனங்களை நடத்தி தொழிலாளர்களை 
காப்பாற்றிய முதலாளிகள் சமூகத்தில் இருக்கின்றார்கள். 


தொழிலாளிகளை காப்பாற்ற நட்டத்தில் தொழில் நடத்துவதை விட, ஆகும் நட்டத்தை மாத மாதம் தொழிலாளர்களுக்கு தொழிலே நடத்தாமல் பிரித்துக் கொடுத்து விட்டால், தொழிலாளர்களுக்கு நேரமும் மிச்சமாகும் பணமும் கிடைக்குமே.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment