Thursday, February 4, 2010

[தமிழமுதம்] அரசியலில் “தல” அஜித்

எனக்கு அரசியல் வேண்டாம்! - அஜித்

Actor Ajith interview about Asal movie
சினிமா நட்சத்திரங்களில் அஜித் ரொம்பவே வித்தியாசமானவர். தான் நடித்த படம் வெளியாவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து, அந்த படம் குறித்து பேசுவது அஜித்தின் தனித்துவங்களில் ஒன்று. அசல் படம் ரீலிஸ் ஆகவிருப்பதையொட்டி சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அஜித். அப்போது அவர் அசல் படம் குறித்து நிருபர்களிடம் ரிலாக்ஸாக பேசினார்.

கேள்வி - பதிலுக்கு என நேரம் ஒதுக்கா விட்டாலும் நிருபர்கள் அஜித்திடம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தனர். அனைத்திற்கும் அவர் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். அரசியல் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அஜித், என் படங்களை அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டும். அதனால்தான் எனக்கு அரசியல் வேண்டாம் என சொல்கிறேன். ஜெயிச்சவங்க சந்தோஷத்தை கொண்டாடுறதுக்காக என் படங்களை பார்க்கணும். தோற்றவங்க ஆறுதலுக்காக என் படத்தை பார்க்கணும், என்றார். அல்டிமேட் ஸ்டார் பட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் எவ்வளவோ மாற்றங்கள் வரும். இன்றைக்கு இருக்கிற சினிமா ரசிகர்கள் ரொம்பவே மாறியிருக்கிறார்கள். அதனால்தான் இனிமேலும் அல்டிமேட் ஸ்டார் பட்டம் போட்டுக்கணுமா?னு யோசி்ச்சேன். வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், என்றார்.

அசல் படத்தில் இணை இயக்குனராக இருந்தது பற்றிய கேள்விக்கு, எதிர்காலத்தில் படம் இயக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அதை உடனடியாக செய்து விட மாட்‌டேன். நிதானமாக இன்னும் பல அனுபவங்களை சேர்த்துக் கொண்டு படம் இயக்குவேன், என்றார்.
--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment