குலோத்துங்கன்
[இணையத்தின் தோற்றம் பற்றி முனைவர் வா.செ.குழந்தைசாமியின் கவிதை]
1. இணையம்என் றறிஞர் கண்ட
ஏற்றமே! இறைவ னும்நின்
துணையினை நாடத் தக்க
சூக்குமப் பொருளாய் நிற்கும்
2. விந்தையே! மானு டத்தின்
மேதையின் மின்னல் என்ன
வந்தனை; மனித சாதி
வந்தநாள் தொடங்கி, இன்றும்
3. கண்டவை, அறிஞர் கூட்டம்
கணித்தவை, கடலும் வானும்
அண்டமும் விரிந்த கல்வி
அறிவெலாம் கைப்பி டிக்குள்
4 தாங்கிநீ எழுந்தாய் நின்றன்
தாக்கமோ துறைகள் தோறும்
ஓங்குதல் தொடர, மாந்தர்
உயர்வுகள் தொடர, நீயோ
5. உருவினில் சிறுத்தாய்; ஆற்றும்
உரத்தினில் வளர்ந்தாய்; விஞ்சைக்
கருவிநீ அறிவின் ஆற்றல்
காட்டினை! புதுயு கத்து
6. விடியலின் வித்தும் வேரும்
விழுதும் நின்கொடை; ஆனாலும்
வடிவினில் அணுநீ! ஆற்றும்
வலிமையில் அண்டம் நீ! நின்
7. காட்சியை வியந்தோம்; பண்டைக்
காவியக் கவிஞர் தங்கள்
மாட்சியில் அன்று கண்ட
வாமனம் தோற்ற தம்மா!
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment