Saturday, January 30, 2010

Re: [தமிழமுதம்] ஆண்-பெண் நட்பு

சாதிக் அலி,
 
          

என்னைப் பொறுத்த வரை நட்பு என்பது ஆண் ஆணிடமும் பெண் பெண்ணிடமும் நட்பு கொள்வது தான் சிறந்தது, பாதுகாப்பானது. திருமணத்திற்குப் பிறகும் அதைத் தொடர இயலும். திருமண வாழ்க்கையில் பிளாக் மெயில், இன்னும் பிற குழப்பங்கள் வராது,  //

ஏற்கிறேன்.

ஆண்களில் பெண்களிடம் கலங்கமில்லாமல் பழகும் நபர்களைக் காண்பது அரிது.  //

அப்படி கலங்கமில்லாமல் பழகுவதற்கு சாத்தியமே இல்லையா?  அப்படி இருந்தால் பழகலாமா?

ஆண்கள் கலங்கமில்லாமல் ஒரு வேளைப் பழகினாலும், சமுதாயம் கிசுகிசுப் பேசி சீரழித்து விடும். //

இந்த காலத்திலும் இது தொடர்கிறதா?   இனியும் நாம் சமுதாயத்திற்கு பயந்துதான் ஆக வேண்டுமா?

இன்றையக் காலத்தில் ஆணும் பெண்ணும் கலந்துப் பழகும் போது எல்லாவற்றிற்கும் தயாராகத் தான் பழகுகிறார்கள். இது புதிய ட்ரெண்ட். சேட்டிங், டேட்டிங், கெட் டு கெதர், லிவ் லி கெதெர் இத்யாதிகள்.  //

இதில் ஏதோ உண்மைகள் இருப்பதுபோல் தோன்றுகிறது.

தோல்வியைத் தான் ஒப்புக் கொண்டாலும் கருத்தில் பின் வாங்க மாட்டேன்.  //

இதில் என்ன இருக்கிறது வெற்றி/தோல்வி எல்லாம்.  ஆனால் நமது மனதுடன் சண்டை போட்டு தோற்கும் காலங்களும் உண்டுதான்.

 

நண்பர் சிவா,

நானும் இருபாலர் பள்ளியில், கல்லூரியில் பயின்றவன் தான். பெண்களை எனது நண்பர்களாக வரித்தது கிடையாது. அதனால் எனது சோஷியல் லைஃபில் என்ன பாதிப்பு வந்து விட்டது. //

இது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.  

நான் ஒரு பாலர் பள்ளியில்/கல்லூரியில் மட்டுமே படித்தேன்.

 

கணவனை விடுங்கள், திருமணத்திற்கு பிறகு தன் கணவன் இன்னொரு பெண்ணிடம் நட்பு என்றால் (பொதுவாக சந்தேகப் படுவதில் சாம்பியனாக பரிமளிக்கும் பெண்ணினம்) அதை ஈராக்கி, பேனாக்கி பார்த்து விடாதா?

ஏனய்யா அந்த குழப்பமெல்லாம்.  //

மனைவி அனுமதித்தால் நட்பு வைத்துக் கொள்ளலாமா?

 

நட்பு வேண்டும், (நமக்கும், பிறருக்கும்) குழப்பமில்லாத, தெளிவான, என்றும் தொடர்கிற நட்பு. 

உன்னதமான நட்பில் எந்தத் தீமையுமில்லை. அது நன்மையே பயக்கும்.

 //

ஓ அப்போ நட்பு தவறில்லை.  சரிதான் என்கிறீர்.

 

செல்வன்,        

என்னை பொறுத்தவரை நட்பில் பலவகை உண்டு. //

என்ன அந்த பலவகை?  விளக்க முடியுமா?

 

நன்றி சங்கர் மஹாதேவன் - நல்ல கருத்து.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



--
நட்புடன்
மீரான்
www.sinegum.wordpress.com
www.vaalkaikalvi.blogspot.com



--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment