Saturday, January 30, 2010

Re: [தமிழமுதம்] ஆண்-பெண் நட்பு

வில்லன்,
 
              

நட்பின் வெற்றிடத்தை திருமண பந்தம் நிரப்புகிறது.

அல்லது திருமணம் வரை வெற்றிடமாக இருக்கும் இடத்தை நட்பு நிரப்புகிறது //

கவிதை நயமாக (நல்லா) இருக்கிறது.  

ஆனால் எனது கேள்வி, திருமணமானவர்கள் நட்பு வைத்துக் கொள்வது சரியா? தவறா? 

 

சார்லஸ்,

        நட்பில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை.... //

        இருக்கலாம்.        

பெண்களுக்கு நம்ம ஊரில் சுதந்திரம் கிடையாது. திருமணம் வரைக்கும் சும்மா இருக்கும் ஆண், திருமணத்துக்கு பின், அந்தப் பெண்ணை நட்பைத் தொடர அனுமதிப்பதில்லை... //

ஆமாம்.  நமது பண்பாடு, கலாச்சாரம், வளர்ந்த விதம் அப்படியாக இருக்கிறது.

 

வேந்தரே,

         பல பேரும் நட்பு காதலாக மாறலாம் என்பார்கள்எனக்கு உடன்பாடு இல்லை.

         சினிமால அப்படி எல்லாம் காட்டுறாங்க.   "பிரியாத வரம் வேண்டும்"  அஜீத்-ஷாலினி படம்.  இப்போகூட ஒரு பாடல் கேட்டேன்.  மன்மதனே நீ கலைஞன்.....என்ற பாடலில் நண்பணே எனக்கு காதலனான் ஆனது இது சரித்திரமோ என்ற வரிகள்.......

         தோழியா?...காதலியா? யாரடி என் பெண்ணே.....இப்படிபட்ட பாடல்களையும் நாம் கேட்கிறோம்.         

காதலாக மாறும் என்றால் ஒருகணமேனும் அவளையோ அவனையோ வேறு பார்வையில் பார்த்து இருக்கலாம்//

அப்படி ஒரு பார்வை வராதா? வரகூடாதா? வருவதற்கு வாய்ப்பே இல்லையா?

அது நட்புக்கு இழுக்கு. // 

இது நமது பண்பாடிலிருந்து வருவது.......

 

நான் அழகான் பெண்களிடம் நட்பு வைத்துக்கொள்வது இல்லை.  //

இதுதான் எனக்கு நகைச்சுவையாக தெரிகிறது.

அழகு எங்கிருந்து வருகிறது?  எல்லாவற்றிற்கும் நமது மனம்தான் காரணம்.

அழகில்லாத பெண்ணும்கூட பழக பழக அழகாய்தான் தெரிவாள் என்று நினைக்கிறேன் :-)

பாவம் வேந்தரே, அழகான பெண்கள்.  உங்களின் நட்பை பெற முடியாமல் போனதற்காக :-)

 

செல்வன்,

எல்லா ஆண்களும் மனைவியின் நண்பர்களை சந்தேககண் கொண்டு பார்ப்பார்கள் என எண்ணுவது முற்றிலும் தவறு.  //

செல்வன் ஒட்டு மொத்தமாக நான் அப்படி சொல்லவில்லை.  ஆனால் பெருபான்மை அப்படியாக இருப்பதை நீங்களும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

 

என்னை பொறுத்தவரை ஒருவரது மிகசிறந்த நண்பர் அவரது வாழ்க்கைதுணையாக தான் இருக்கணும்.அடுத்து பிள்ளைகள்.இவர்களூடன் கழித்த நேரம் போகதான் மற்றவர்களுடன் கழிக்கணும்.  //

அதாவது மனைவி, பிள்ளைகளை எல்லாம் முறையாக கவனித்துக் கொண்டு நட்புகள் வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று சொல்ல வாரீர்....அப்படிதானே?

 

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
நட்புடன்
மீரான்
www.sinegum.wordpress.com
www.vaalkaikalvi.blogspot.com



--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment