Thursday, January 7, 2010

Re: [தமிழமுதம்] ராஜாங்க அடிமை



2009/12/27 பிச்சுமணி <v.pitchumani@gmail.com>


ஒழிக்கப்பட்ட  ஜமின்தாரர்களின்
சிம்மாசனத்தில் அரிதாரம் பூசிய
பிரபுவாக அவன் அமர்ந்திருந்தான்

சிறப்பாக அழைத்தான்
ஓட்டைரதமும் குருட்டு குதிரைகள்தான்
என் தாமதத்துக்கு காரணம் தெரிந்தும்
அவனது வெள்ளி திருவோட்டில்
தங்க திருவோட்டின் உறவால் ஏற்பட்ட
தங்க மூலாம் பூச்சு ஒளியில்
புத்தன் மறுத்த பிச்சையினை
என் அலுமனிய திருவோட்டில்
சுமக்க  மனமில்லாவிட்டாலும்
கனமாய் எரிந்தான்

பிச்சையினை திரும்ப தர
திருவோட்டை திருப்ப எத்தனித்தேன்
விரல்கள் என் வேர்களாகி தடுத்தன
திருவோடு உடைந்துவிடுமென

செரிக்க நினைத்தேன்
கல்லாய்  அடிமனதில் கனத்தது
யார் மீதும் இறக்கிவிடக்கூடாதென
கவனமாக நடந்தேன்
சீடர்கள் தப்பினார்கள்

 
மேய்ச்சலில் அடிவாங்கிய தாய் பசுவின்
துன்பம் தெரியா கன்று அடிமடியை முட்டியது


சிறப்பான வரி..
 
வாயில் ஒட்டிஇருந்த பிச்சை சோற்றுபருக்கை
விழுந்து கன்றின் கால்கள் முறிந்தன

செரிமான கஷ்டத்தில் நானிருக்கையில்
பிச்சைகாரன் பிச்சை கேட்டான்
:)
 
என்னிடமே பிச்சையா போ போ என்றேன்
இல்லை என்று சொல் ஏன் விரட்டுகிறாய்
ராஜாங்க அடிமை என்ற திமிரென
முணுமுணுத்தபடி அவன் கைவிசி நடந்து சென்றான்


பிச்சுமணி சார் நல்வரவு தமிழமுதத்துக்கு...


--
சாந்தி

God loves you because of who God is, not because of anything you did or
didn't do.

http://punnagaithesam.blogspot.com/ =============================

No comments:

Post a Comment