இன்றக்கு 14 நாடுகளில் இருந்து அமெரிக்காபயணிப்போரை தனிப்பட்ட சில சோதனைகளை மேற்கொள்வார்கள் என்று அமெரிக்கா அறிவித்து இருக்கு. அதில் நாய் கொண்டு மோப்பம், உடல் முழுதும் தடவி பார்த்தல் அடக்கம்
சவுதி அமைச்சர் ஒருவரிடம்தான் நேரடி சரணடைகிறேன் என்று வந்த ஒரு அல்கொய்தா ஆள் எரு போடும் வாசலில் ஒரு வெடிகுண்டை செருகி வந்து வெடிக்கசெய்ததில் அமைச்சர் உயிர் தப்பி விட்டார்
அல்கொய்தா புதிய புதிய செயல்முறைகளை கையாளுது. புதிய போராளிகள் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள்
பாவம் ஈழ மக்கள்.
பிரபாகரனோடு போராட்டம் பிசுத்து போச்சு
4 ஜனவரி, 2010 2:15 pm அன்று, M.RISHAN SHAREEF <mrishanshareef@gmail.com> எழுதியது:
--
நெதர்லாந்திலுள்ள அம்ஸ்டர்டாம் நகர சிபோல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் அனைத்துப் பயணிகளும் உடல் ஊடுகாட்டும் கருவி பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
நத்தார் தினத்தன்று அமெரிக்க விமானமொன்றில் நைஜீரிய இளைஞன் ஒருவன் வெடி பொருட்களுடன் பயணித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலேயே இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
உமர் பாரூக் அதுல்தாலப் என்ற மேற்படி நைஜீரிய குண்டுதாரி, நைஜீரியாவின் லாகோஸ் நகலிருந்து அம்ஸ்டர்டாமை வந்தடைந்த பின்னரே அமெரிக்க டெட்ரோயிட் நகருக்கான விமானத்தில் பயணமானார்.
தனது உள்ளாடையில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த உமர் பாரூக் அதுல் தாலப் பாதுகாப்பு பரிசோதனைகளைத் தாண்டி அமெரிக்க விமானத்தில் ஏறியதையடுத்து விமான நிலையங்களின் பாதுகாப்பு குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
உலோகங்களைக் கண்டுபிடிக்கப் பயன்படும் பரிசோதனைக் கருவிகள் உமர் பாரூக்கின் உடலில் வெடி பொருட்கள் எதுவும் இருப்பதாகக் காண்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் தரையிறங்குவதற்கு 20 நிமிடங்களின் முன் குண்டை உமர் பாரூக் வெடிக்க வைக்க முயற்சித்த போது குண்டு வெடிக்கத் தவறியதால் அவர் கடுமையான எரிகாயத்திற்கு ஆளானார்.
சிபோல் விமான நிலையத்தில் ஏற்கனவே 15 உடல் ஊடுகாட்டும் உபகரணங் கள் உள்ள போதும், அந்தரங்கத்தன்மையை பாதுகாப்பது தொடர்பான அக்கறைகளால் அவை கடும் கட்டுப்பாட்டின் கீழ் வரையறுக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்பட்டன.
இந்த ஊடுகாட்டும் உபகரணம் ஆடைக்குள்ளும் சட்டைப் பைகளுக்குள்ளும் உள்ள பொருட்களை வெளிப்படுத்தக் கூடியதாகும்.
எனினும், உள்ளாடைக்குள் வெடி பொருட்களை மறைத்து வைத்திருக்கும் ஒருவர், இந்த உபகரணத்தில் சிக்கிக் கொள்ளாமல் செல்லக் கூடிய சாத்தியம் தொடர்ந்தும் உள்ளதாக கூறப்படுகிறது.
--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment