Monday, January 18, 2010

Re: [தமிழமுதம்] Re: ஏர் இந்தியா என்ற அசிங்கம் பிடித்த நிறுவனம்

சாந்தி,

ராணுவம்,போலிஸில் இருக்கும் பிட்னஸ் தேர்வை பணிபெண் வேலைக்கு இருக்கும் பிட்னஸ் தேர்வுடன் எப்படி ஒப்பிட முடியும்?அப்படியே ஒப்பிட்டாலும் விமானவிபத்து என்றால் கீழே விழுந்து கிடக்கும் பயணிகளை தூக்க கூட 50 கிலோ பெண்னால் முடியாது.பிட்னஸ்/உடல்வலு தான் தகுதி என்றால் 75 கிலோ,80 கிலோ எடையுள்ள வலுவான ஆன்கள்தான் இந்த வேலையில் பெரும்பாலும் இருப்பார்கள்.

பின்புறத்தை கழுவ தெரியாத குழந்தைகளுக்கு சேவை செய்ய 1 - 5 வகுப்பில் பெண்களை நியமிக்கிறார்கள்.விமான பயணிகளுக்கு அம்மாதிரி பிரச்சனைகள் வரவாய்ப்பில்லை.வந்தாலும் 51 கிலோ எடையுள்ல பெண்ணால் அந்த வேலையை செய்ய இயலும்.

இந்த வேலைக்கு பெண்களை மட்டும்,அதுவும் 35 வயதுக்கு கீழான 50 கிலோவுக்கு எடை குறைந்த பெண்களை மட்டும் நியமிப்பது காமுகர்களின் வெறிக்கு தீனிபோடுவது என்பதை தவிர எந்த ஜ்காரணத்தாலும் இல்லை என்பது ஏர்லைன்ஸின் இம்மாதிரி மூடதனமான விதிகளால் பச்சையாக தெரிகிறது.பெண்களை பெண்களாக பார்க்காமல் பிகர்களாக கருதும் இழிவான மிருகங்களின் கண்ணோட்டத்தில் ஒரு அரசுநிறுவனம் தன் பணிக்கான விதிகளை வைத்திருப்பது பெணினத்துக்கே அவமானம் தேடிதரும் செயல்.

2010/1/17 jmms jmmsanthi@gmail.com



 

ஜொள்ளுக்காக  எடை குறைப்பு அல்ல.. குறைந்த எடை உள்ளவர்காளால் சிறப்பாக சேவை செய்ய முடியுமென்பதே நோக்கம்..


ராணுவம் , Coast Gaurd போன்றவற்றிலும் பெண்களுக்கு இதே போல பிட்நஸ் தேர்வு உண்டு...


விமானத்தில் அவசர நேரங்களில் பயணிகளுக்கு உதவிட எடை குறைந்தவர்களால் சுறுசுறுப்பாக பங்காற்றி தன்னையும் பயணிகளையும் காப்பாற்ற முடியும் என்பது ஏர்வேஸீன் எண்ணம்..


 
 
 
 
50 கிலோ எடையுடன் அனைத்து தகுதியோடு இருக்கும் பெண்கள் கிடைப்பதால் ஏன் 51 க்கு ஒதுக்கீடு தரணும்... ?

அவர்கள் அதே நிறுவனத்தில்  வேறு இடத்தில் வேலைக்கு செல்லலாமே?.

ஏர்ஹோஸ்டஸ் என்றாலே ஜொள்ளுக்குத்தான் என நினைப்பது தவறு.. எப்படி 1-5 ம் வகுப்புக்கு பெண் ஆசிரியர்கள் பொருத்தமோ அதே போல இப்பணிக்கு பெண் ஏர் ஹோஸ்டசின் சேவை தான் சிறப்பே தவிர ஜொள்ளுக்காக அல்ல..


( ஜொள்ளக்கூடாதுன்னே சில ஏர்வேஸில் கட்டுப்பாடும் இருக்கே...:)  )




--
சாந்தி

God loves you because of who God is, not because of anything you did or
didn't do.

http://punnagaithesam.blogspot.com/ =============================


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell

No comments:

Post a Comment