35 என்ற வயது அப்புறம் ஏன் விமானபணிபெண்களுக்கு ரிடையர்மெண்ட் வயதாக நியமிக்கப்பட்டது?35 வயதை தாண்டினால் கிழவி என்று காமடி செய்யவேண்டாம்.
கீழே விழுந்தவர்களை தூக்கிவிட கூட 50 கிலோ எடையுள்ல பெண்களால் முடியுமா என்பது சந்தேகம் எனும்போது பேரிடர் சூழலில் அவர்களால் துரிதமாக செயல்படமுடியும் என்பது சரியா?51 கிலோ எடை இருந்தால் விமான சீட்டுகளுக்கிடையே நடக்கமுடியாது என்பதை யாராவது ஏற்பார்களா?தயவு செய்து நீங்களே நடுநிலையில் இதை யோசித்து வாதங்களை எடுத்து வையுங்கள்.பெண்கள் மட்டும், ஐம்பது கிலோ, 35 வயது கல்யாணம் ஆனால் வேலை பறிமுதல்..இம்மாதிரி இழிவான விதிகளுக்கு என்ன காரணம் என்பதை வாதத்தை தாண்டி சிந்தியுங்கள்.ஆணாதிக்கத்துக்கு இரையான பெண்களின் பட்டியலில் மேலும் 11 பெண்கள்.இதை வளரவிட்டால் நாளை எந்த பெண்ணும்,எந்த வேலையிலும் இருக்கமுடியாது.
இந்த வேலைக்கு பெண்களை மட்டும்,அதுவும் 35 வயதுக்கு கீழான 50 கிலோவுக்கு எடை குறைந்த பெண்களை மட்டும் நியமிப்பது காமுகர்களின் வெறிக்கு தீனிபோடுவது என்பதை தவிர எந்த ஜ்காரணத்தாலும் இல்லை என்பது ஏர்லைன்ஸின் இம்மாதிரி மூடதனமான விதிகளால் பச்சையாக தெரிகிறது.பெண்களை பெண்களாக பார்க்காமல் பிகர்களாக கருதும் இழிவான மிருகங்களின் கண்ணோட்டத்தில் ஒரு அரசுநிறுவனம் தன் பணிக்கான விதிகளை வைத்திருப்பது பெணினத்துக்கே அவமானம் தேடிதரும் செயல்.
35 வய்து ஜொள்ளுக்குரிய வயது என கருதுகின்றீர்களா ?..
ஏதோ வயது 18- 24 வரை என வைத்தால் சொல்லலாம்..
திருமணமானவர்கள் , பேறுகாலம் ஆனவர்கள் கூட உண்டே..
எடை மட்டும்தானே கட்டுப்பாடு?.. அது ஜொள்ளுக்காக எப்படி இருக்க முடியும்/..
எடை கூடியவர்களை ஜொள்ளுவதில்லையா அப்படியென்றால்.?
அதுவல்ல காரணம்.. Disastrous situation லயும் எடை குறைந்தவர்களால் தூரிதமாக செயல்படமுடியும் ...
நடைபாதையில் , மிக குறுகிய இடங்களில் அவர்கள் சேவை எவ்வித இடையூறின்றி நடந்திட ஏதுவாயிருக்கும்..
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell
No comments:
Post a Comment