Monday, January 4, 2010

Re: [தமிழமுதம்] Re: இந்தியா உலக அளவில் ஜாம்பவனாக மாறப்போகும் காலம்

வேந்தே இதையெல்லாம் விட முக்கிய காரணி ஒன்று உள்ளது. அது அரசியல்.

சீனா போன்ற கட்டுதிட்டமான நாட்டில் உள்ள தலைவருக்கு யாரேனும் தனக்கு போட்டியாக வந்து 
விட்டதாக கருதினால் என்ன நடக்கும் என்பது உலகம் அறிந்த வரலாறு. அது போன்ற சமயங்களில் 
உண்மையாகவே போட்டியாளர் திறமையுடன் போராடினால் நிச்சயம் அந்த நாடு பல்லாண்டு கால
வளர்ச்சியை இழந்தே தீர வேண்டியிருக்கும். கிட்டதட்ட உள் நாட்டு போர் தான்.

இந்தியாவில் மன்மோகன் சிங்கோ தினமும் பத்திரிக்கையை பார்த்தே தான் இன்னமும் பிரதமாராக உள்ளதை நிச்சயம் செய்துக்கும் நிலை. சோனியா கோவிச்சுகலாம், பவார் ஆட்சியை உடைக்கலாம் இப்படி ஏகப் பட்ட பிரச்சினைகள் உள்ளதால் பதவியை யாரும் நிரந்தரமாக எண்ணுவதில்லை. அரசியல் தலைமையை நம்பி இந்திய வளர்ச்சி கிடையாது.

சீனாவிற்க்கு இன்றைய வரமே நாளைய சாபம்.

இந்தியாவிற்க்கு இன்றைய சாபமே நாளைய வரம்.

2010/1/5 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>

சீனா வெகு வேகமாக பொருளாதாரத்தில் முன்னேறி வருது. இருப்பினும் அமெரிக்காவை விஞ்ச பல பதினாண்டுகள் ஆகும். காரணம் உலகின் தலை சிறந்த பல்கலைகள் 100 கணக்கு எடுத்தால் அதில் 50 க்கும் மேல் அமெரிககவிலேயே இருக்கும், அமெரிக்கா ஆராய்ச்சிக்கு செலவிடும் பணம் மிக மிக அதிகம்
 
இந்த இரண்டு துறைகளிலும்  நம் நாடும் பலபடிகள் பின்தங்கியுள்ளோம்
 
சீனாவை விட நாம் ஜனநாயகத்தில் முன்னேறியுள்ளோம். தொழில் முனைவோரும் அதிகம்.
ஜனநாயகத்துக்கு தன்னைத்தானே திருத்திக்கொள்ளும் தன்மை உடையது
சீனாவில் மேல் மட்டம் உணரவேண்டும். அதுக்கு தன்மானம் இடம் கொடுக்காது
 
சீனாவை போலனறி இந்திய பொருளாதாரம் உள்நாட்டு சந்தையையே (மென்கலன் தவிர) பெரிதும் நம்பி உள்ளது. அதுவும் ஒரு பலம்.

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment