Sunday, January 17, 2010

Re: [தந்தை பெரியார்] Re: [தமிழமுதம்] Re: இறைவன் உள்ளானா இல்லையா என்பது முடிவற்ற விவாதம்.

நண்பர் சோம. இளங்கோவன்,
 

பாட்டியம்மா இதிகாசப் புராணக் கதைகளைப் பெரியார்  உண்மை என்று நம்பி பிறகு இல்லை என்று நிரூபிக்க  முயன்றார்.   
 
தி.மு.க. ஏன் உதய சூரியனைக் கொடியில் வைத்துள்ளது ?  ஊரை ஏமாற்றவா ?   பெரியார் இட்ட வெள்ளைப் புள்ளி ஏன் காணாமல் போனது ?  
 
இது எப்படி என்றால் இன்பமயவாதி (Optimist) இருட்டில் தெரியாத ஓர் ஒளியைக் கண்டு வணங்கினான்.
 
துன்பமயவாதி (Pessimist) அதை நம்பி ஊதி அணைத்து விடப் போனானாம் !!!
 
(First create a fire where there is none.  And then try to put it out.)   
 
பிரச்சனை  யில்லாத கடவுளைப் பிரச்சனையாகச் 
சொல்லிச் சொல்லிப் பொன்னான பொழுதை வீணாக்கிய 
பகுத்தறிவாளர் பெரியார்.
  
அவரைப் போல் நீங்களும் சொல்கிறீர்.
 
++++++++++++++++
 
////கடவுளுக்கும்,உங்களுக்கும் ஒரு ஏஜண்ட் வைத்து,அவர் பேசும் புரியாத மொழி மட்டுந்தான் கடவுளுக்குப் புரியும் என்று ஏமாற்றி,பிறப்பால் நான் கீழானவன் என்பதை ஒத்துக் கொள்ளாமல் இருந்தீர்கள் என்றால் அதுவே பகுத்தறிவு தான்.///
 
இப்படிக் கோடி முறை அலறிப் பெரியார் போல் பித்தராகி விட்டீர் நண்பரே !
 
நீவீர் இன்னும் 19 ஆம் நூற்றாண்டில்தான் சுவாசிக் கொண்டிருக்கிறீர் நண்பரே !
 
++++++++++++
 
அண்ணா வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்றால்,  பெரியார் வைத்தது திராவிடப் பின்னேற்றக் கழகமா ?  
 
கூர்மை அறிவுள்ள அண்ணாத்துரைக் கண்டு பெரியார் பொறாமைப் பட்டதால், அவர் தம்பிகளுடன் பிரியும் போது வருத்தப்பட வில்லை.  லீடர்ஷிப் இல்லாத பெரியார் செய்த இமாலயத் தவறு அண்ணாவை தி.க. வை  விட்டு வெளியேறச் செய்தது.   
 
காந்தியார் தன்னை விட விஞ்ஞான அறிவு மிக்க நேருவே விடுதலை இந்தியாவின் முதல் பிரதமராக இருக்க வேண்டும் என்று ஆசி  வழங்கினார்.  
 
 
சி. ஜெயபாரதன்.
++++++++++++++++++
 
2010/1/17 Soma Ilangovan <somailangovan@gmail.com>
பெருமதிப்பிற்குரிய ஜெயபாரதன் அவர்களே,

வாழ்த்துக்கள்.
பிள்ளையாரிலிருந்து சூரியனுக்கு  முன்னேறியுள்ளீர்கள்.
கண்ணுக்குத் தெரியும் கடவுள்.

ஆமாம், சந்திரபஹவான் ஒரு காலத்தில் கடவுளாக இருந்தாரே மனிதன் கால் வைக்கும் வரை.
நவ கிரஹத்தில் ஒன்று குறைந்து விட்டதே, கோவிலகளில் சுற்றும் போது எட்டா,ஒன்பதா ? எதைச் சுற்றச் சொல்லுகிறீர்கள் ?

தங்களைப் போன்ற ஆழ்ந்த அறிவியல் கட்டுரைகளை அழகுத் தமிழில் எழுதியவர்கள் இப்படி எழுதலாமா?
யாரை வேண்டுமானாலும்,எதை வேண்டுமானாலும் கடவுளாக வைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் கடவுளுக்கும்,உங்களுக்கும் ஒரு ஏஜண்ட் வைத்து,அவர் பேசும் புரியாத மொழி மட்டுந்தான் கடவுளுக்குப் புரியும் என்று ஏமாற்றி,பிறப்பால் நான் கீழானவன் என்பதை ஒத்துக் கொள்ளாமல் இருந்தீர்கள் என்றால் அதுவே பகுத்தறிவு தான்.

viduthalai.com  சென்று ,அதிலே  பெரியார் வலைக்காட்சியில்

solutions  என்ற வலைக் காட்சி வரும். அதைப் பாருங்கள்.நீங்கள் கேட்ட
கழிவறைகள் பற்றிய கேள்விக்குப் பதில் தெரியும்.

சோம.இளங்கோவன்.

2010/1/17 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>
வேந்தரே,
 
 
பகுத்தறிவுக் கட்சிகள் கூட உதய சூரியனைக் கொடியில் பறக்க விட்டு வணக்கம் செய்கிறது.
 
கடவுளே கிடையாது என்று சதா கதாகாலச்சேபம் செய்யும்  கட்சிகள், சூரியனை வரைந்து கொண்டு வடிவ வழிபாடு செய்து வருவது ஏன் ?  
சூரியன் கண்ணுக்குத் தெரியும் கடவுள் !   சக்தி மயம் !  எரிசக்தி ஒளிப் பிழம்பு !   கற்காலத்தில் இருந்தே மனிதன் வழிபடும் கடவுள் ! 
 
உதய சூரியனைத் தினமும் தெரியாமல் பாடி வருகின்றன பகுத்தறிவுக் கூட்டம் !    ஆச்சரியமாக இல்லையா ?
 
வாழ்க பகுத்தறிவு !!!!
 
 
சி. ஜெயபாரதன்.
 

 
2010/1/17 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>


17 ஜனவரி, 2010 5:30 am அன்று, Jay Jayabarathan <jayabarathans@gmail.com> எழுதியது:

இளங்கோ, புத்தர், மாகாவிரர்  கடவுளை நம்பலையே
 
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
என்று சிலப்பத்திகாரத்தில் இளங்கோவடிகள்
இறை வழிபாட்டை மறக்கவில்லை.
 
 
ஞாயிறு, திங்கள், மழை இவைதான் கண்கண்ட கடவுள்கள்
 
இவற்றை தவிர வேறு கடவுளர் இல்லை
 
திங்களும் மாரியும் ஞாயிற்றை சார்ந்து இயங்குகின்றன
 
எனவே சூரியனே கண்கண்ட முழுமுதல் கடவுள்
 
அவனின்றி இந்த பூஉலகில் புல் பூண்டு பூச்சி எதுவும் இல்லை
அவன் பார்வையில் அனைத்து உயிர்களும் சமம்
அவன் நம் அன்றாட வாழ்க்கையை கட்டுப்படுத்துவது இல்லை
தியானம் ஒரு நல்ல பயிற்சி என்றால் சூரியனை நினைத்து தியானிக்கலாம். ஆனால் தன்னை போற்றணும் என்று அவன் விரும்புவதும் இல்லை
 
 
 
 
மதத்தின் ஓர் அம்சம் : கடவுள், ஆன்மா, உயிரைப் பற்றி ஆராய்வது.  
 
இஸ்லாம் மதத்தைப்போல் உருவ வழிபாட்டை மட்டும் புத்தர் வெறுத்தார்.   கடவுள் இல்லை என்று எங்கே புத்தம் சொல்கிறது ?
 
கடவுள் இருக்கு என்று எங்கே சொல்லுது?

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்


--
---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thanthaiperiyar@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiyar-unsubscribe@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
         http://thanthaiperiyar.blogspot.com/


No comments:

Post a Comment