
போன்ற நதிக்கரைகளிலும் அப்படித் தான் இருக்கு. என்ன மக்கள் போங்க! ஒரு துணி துவைக்கிறது, குளிக்கிறது, லாரியைக் கழுவறது, மாட்டு வண்டிகளைக் கழுவறதுனு பார்க்க முடியாமல் நொந்து போயிட்டேன் போங்க!

கிருஷ்ணா நதியைக் கடக்குமிடம், விஜயவாடாவுக்கு அருகே! ஆகாயத் தாமரைக் கொடிகளோ, மற்ற செடி, கொடிகளோ காண முடியவில்லை. நீரும் கொள்ளிடம், காவிரி போலக் கறுப்பாய் இல்லை. நாம் எப்போ அப்படி மாறப் போறோம்????????? அங்கங்கே செக் டாம்கள் எனப்படும் தடுப்பணைகளும், அவை விவசாய நிலங்களுக்குச் செல்லத் தோதான கால்வாய்களையும், குடியிருப்புகளுக்குச் செல்லுமிடங்களில் நீர் இறைக்கும் பம்ப்செட்களும் காணப் படுகின்றன. எல்லாவற்றிலும் முக்கியமானது ஆளில்லா லெவல் க்ராசிங் ஆனாலும் மக்கள் நின்னு ரயில் போகும் வரையில் காத்திருந்து பின்னர் கடக்கின்றனர். பொதுவாக வட இந்திய மக்கள் பேச்சும், பழக்கமும் நம்மைப் போன்ற தென்னிந்தியருக்கு அலட்சியம் கலந்தும், பொறுப்பில்லாமையாகவும் தெரியும்.
ஆனால் அப்படி இல்லைனு பழகினாலோ, அல்லது நெடுநாட்கள் அங்கே தங்கி இருந்து பார்த்தாலோ புரியும். எங்களோட குஜராத்தில் 25 வருடங்களுக்கு மேலாக இருந்து தொழில் புரியும் ஒரு தொழிலதிபரும் பயணித்தார். அவர் சொன்னது எல்லாமே ஆச்சரியமாகவே இருந்தது. 24 மணி நேரம் மின் விநியோகம், குடி நீர் விநியோகம். செளராஷ்ட்ரா, கட்ச் பகுதியில் தண்ணீருக்கு மக்கள் கஷ்டப் படாமல் இருக்க ஏராளமான ஏற்பாடுகள். வேலை வாய்ப்பில் இந்தியாவிலேயே முதன்மைத் தகுதி வாய்ந்த மாநிலம். இந்த விஷயம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் 15-ம் தேதியிட்ட பதிப்பில் தலைப்புச் செய்தியாகவும் வந்துள்ளது. தொழில் தொடங்குவோருக்குத் தடையில்லாத உள்கட்டமைப்பு வசதிகள். மக்களுக்குத் தொந்திரவில்லாமல் இடம் வாங்கிக் கொடுப்பது தொழில் முனைவோருக்கு. அதில் இரு தரப்பினரும் மோத முடியாத அளவுக்குக் கவனமாக இடத்தைத் தேர்ந்தெடுத்தல் என்று சாமானியர்களைக் கவனத்தில் வைத்து முடிவுகள் எடுக்கப் படுகின்றன. அந்த அளவுக்கு மாநில முதலமைச்சர் உழைத்திருக்கின்றார் என்றால் மக்கள் அனைவருமே அவருக்குத் தோள்கொடுக்கின்றார்கள். இது ஒரு குழுவாகச் செயல்படுவதன் வெற்றி என்றே தோன்றுகின்றது. இன்னும் சோம்நாத், துவாரகை, டாக்கூர், பரோடா, போன்ற ஊர்களில் உள்ள சாமானிய மனிதர்களான ஆட்டோ ஓட்டிகளில் இருந்து துணிக்கடைக் காரர்கள், பலவிதமான வியாபாரிகளிடமிருந்து பேசியதில் குஜராத் நிஜமாகவே முன்னேறிக் கொண்டிருக்கின்றது புரிய வந்தது. ஆனால் வேறு சில மாற்றங்களும் உண்டு.
2010/1/18 Naresh Kumar <meetnnk1@gmail.com>
//நீங்கள் கூறும் மதச் சார்பின்மை இல்லை என்பது மிகவும் கவலைக்கு உரிய விசயம்.அதனால் தான் விளக்கம் கேட்டேன். தாங்கள் கூற வருவது யாதோ...? :( :(//தமிழகம் பொருளாதாரத்திலோ, படிப்பறிவிலோ முதலிடத்தில் இல்லாமல் இருக்கலாம்...ஆனால் மதப் பிரச்சனைகள் சம்பந்தப் பட்ட விஷயத்தில் மற்ற வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நாம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறோம்.....அதுவும் குஜராத் போன்ற மாநிலங்களோடு நமது மாநிலத்தை ஒப்புமை படுத்துவது காமெடியாக இருக்கிறது.... தமிழ்நாடு அவ்ளோவா மோசமா போயிடுச்சி????
--
நரேஷ்
www.nareshin.wordpress.com
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment