Sunday, January 3, 2010

Re: [தமிழமுதம்] Re: படிச்சது... பிடிச்சிருந்தது-1



30 டிசம்பர், 2009 11:54 pm அன்று, நலம் பெறுக <nalamperuga@gmail.com> எழுதியது:
இந்தக் கதையை எங்கே எப்போது படித்தேன் என நினைவில்லை.. ஆனால் கதை நன்கு நினைவில் உள்ளது

அரசன் அரசவையில் ஓரிரு சொல்லில் கேள்வி கேட்பதும் அதற்கு அரசவையோர் ஓரிரு சொல்லிலேயே பதிலளிப்பதும் வழக்கம்

அன்றைக்கு அரசன் கேட்ட கேள்வி," க்வ வித்யா" ( அறிவு எங்கே/ எது)

அந்த சமயம் பார்த்து கவி புனைவதிலே மிகுந்த தீவிர சிந்தனையில் இருக்கும் காளிதாசனை அவனது அருகில் இருந்த புலவன் தட்டி எழுப்பி, " ஏய் காளிதாசா அரசரி வினா காதில் விழவில்லையா" என உசுப்பேத்திவிட

ஏதோ நினைவில் இருந்த காளிதாசன் ," ஸ்தன மத்ய" என பதில் அளிக்கிறான்.. அதாவது மார்பகங்களின் நடுவே என பொருள் வரும்படி

அரசவையே திடுக்கிடுகிறது.. காளிதாசன் நிதானத்துக்கு வருகிறான்.. தான் உரைத்தது என்னவென அவனுக்குப் புரிகிறது..

கவலையில்லை அவனுக்கு

'அரசே ஏன் இப்படி அரசவை கலங்குகிறது.. குழந்தையாகப் பிறந்த எவனும் தாயின் மார்பில் சுரக்கும் பாலை நோக்கிச் செல்வதும் அதில் தொடங்கி பருவம் வந்து மணமாகி காம சுவைக்கென மனைவியின் தனம் நாடி செல்வதுமான இந்த இரண்டுக்கும் இடையே நடக்கும் எல்லாவற்றிலும் அறிந்து கொள்ள வேண்டியன நிறைய உண்டு .. அங்கெல்லாம் வித்தை நிறைய உண்டு என பொருள் வருமாறு மார்புகளுக்கு இடையே என ஸ்தன மத்ய என சொன்னேன்.. அதாவது அந்த தனத்துக்கும் இந்த தனத்துக்கு இடையே"


 
காளிதாளன்
 
சொல்லாமல் உணர்த்தியது
திருமணத்துக்கு பின் நம் அறிவு வளருவது இல்லை
துறவிகள் அறிவு வளர்ந்துகொண்டே போகும்
பரத்தமை போகிறவனுக்கு மூளையே இருக்காது
 
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment