அயல்நாடுகளில் பணியாற்றும் அறிவியலார் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று மன்மோகன் வேண்டுகோள் விடுத்து இருக்கார்
அவருடைய பிள்ளைகள் முதலில் திரும்புவார்களா? அல்லது அவர்கள் அறிவியலார் இல்லையா?
4 ஜனவரி, 2010 2:47 am அன்று, tamil payani <tamilpayani@gmail.com> எழுதியது:
பிரிட்டன்: நாடு திரும்பும் 25,000 இந்திய டாக்டர்கள்
டெல்லி: பிரிட்டனில் பயிற்சி பெற்றுவரும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் அடுத்த இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் தாயகம் திரும்ப உள்ளனர்.--
டெல்லியில் உள்ள பிரபல 'எய்ம்ஸ்' மருத்துவக் கல்வி நிறுவனத்தைப் போல மத்திய அரசு உருவாக்க உள்ள உயர்கல்வி நிலையங்களில் இவர்களில் பெரும்பாலானோர் பணியாற்றுவார்கள் என கூறப்படுகிறது.
பிரிட்டனில் பணிபுரியும் இந்திய மருத்துவர்களுக்கு அந்நாட்டு அரசு கடும் நிபந்தனைகளை விதித்து வருகிறது. விசா நடைமுறைகளும் மாற்றப்பட்டு வருகிறது.
இதனால், அங்கு பணியாற்றி ஓய்வு பெறும் மருத்துவர்களுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன. இதன்காரணமாக அவர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளனர்.
மேலும், பிரிட்டனில் பயிற்சி பெற்றுவரும் இளம் மருத்துவர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதியாவது சந்தேகத்துக்கு இடமான நிலையில் உள்ளது. எனவே அவர்களும் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
டெல்லி 'எம்ய்ஸ்' மருத்துவ நிறுவனத்தைப் போல புதிதாக ஏழு கல்வி மற்றும் மருத்துவ நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது.
பீகார், சட்டிஸ்கார், மத்தியப்பிரதேசம், ஒரிசா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த மருத்துவ மைங்கள் அமைய உள்ளன. இதற்காக ரூ.300 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலையங்களை கையாள மருத்துவத் துறையில் சர்வதேச பயிற்சி பெற்றவர்கள் தேவை என்ற அடிப்படையில் பிரிட்டனில் பயிற்சி பெற்ற இந்த இளம் மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க மத்திய சுகாதாரத் துறை சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரிட்டனில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரமேஷ் மேத்தா டெல்லி வந்துள்ளார். அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதுபற்றி கூறுகையில்,
'பிரிட்டனில் பல்வேறு பகுதிகளில் மருத்துவ பயிற்சி பெற்றுவரும் இந்தியர்களில் சுமார் 15 ஆயிரம் பேர் தாயகம் திரும்ப இருக்கிறார்கள்.
மேலும், பிரிட்டனில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெரும் இந்தியர்கள் குறைந்தது 10 ஆயிரம் பேர் இருப்பார்கள். நீண்ட அனுபவம் மிக்க இந்த மூத்த மருத்துவர்களும் இந்தியா திரும்ப இருக்கிறார்கள்.
அடுத்த இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் இந்தியாவுக்கு திரும்ப உள்ளனர்.
இவர்கள் அத்தனை பேரின் விருப்பம் குறித்தும் நான் இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அவர்களும் சாதகமான பதிலையே தந்துள்ளனர்' என்றார்
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment