Saturday, December 19, 2009

Re: [தமிழமுதம்] மேலாண்மை பாடத்தில் பகவத் கீதையை சேர்க்கலாமா ?



நானாக இருந்தால், போர் செய்யேன் என்ற பார்த்தனை போய் ஓரத்தில் உட்கார் என்று  சொல்லி இருப்பேன். அபிமன்யூ கொல்லப்பட்டதை அறிந்தவுடன் அவனுக்கு தானாகவே சீற்றம் வரும்


மிக அருமை வேந்தர்!

மெக்பத் நாடகத்தில் இருந்து ஒரு காட்சி.

மேக்டப்பின் மனைவியும் குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். அந்தக் கால முறைப்படி அதுக்கு மேக்டப் பழிக்கு பழி வாங்குவது தான் முறை. அங்கு வரும் நண்பன் ஒருவன், நீ உடனே சென்று உன் இப்படி செய்தவர்களை அழி என்று மேக்டப்பிடம் கூறுகிறான். அதற்கு மேக்டப்,

"நான் அப்படித் தான் செய்வேன் (செய்ய வேண்டியதிருக்கும்), ஆனால் நான் அப்படி செய்ய வேண்டும் என்பதனை ஒரு மனிதனாக நான் முதலில் உணர வேண்டும்" என்பான்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment