Tuesday, December 22, 2009

Re: [தமிழமுதம்] ஆங் கில வழி கல் விக்கு ஆத ர வாக செயல் ப டும் தமி ழக அரசு : ராம தாஸ் குற் றச் சாட்டு



2009/12/22 Mani Manivannan <mmanivannan@gmail.com>
 
 
தன்னலம் என்பது கொள்கை அல்ல.  இயல்பு.  அடுத்த தலைமுறை, வருங்காலம் என்பவற்றைப் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றத் தன்னலம் வழி வகுப்பதில்லை.  அதனால்தான், அத்தகைய பொறுப்புகளை அரசுகளும், பொதுநல நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அரசு நடத்தும், அல்லது உதவி செய்யும் மொழி வழிப் பள்ளிகள் பற்றிய கொள்கைகள் அடுத்த தலைமுறை பற்றித்தான் இருக்க வேண்டும்.



தன் பிள்ளைகள் நலனை பற்றி சிந்திப்பது தன்னலம்.பெற்றோரின் அத்தகைய தன்னலமே அவர்கள் அடுத்த தலைமுறையை வளர்க்க வழி வகுக்கிறது.சமூகத்தின் தன்னலம் அடுத்த தலைமுறையை வளர்க்கிறது.அரசாங்கம் என்பது சர்வாதிகார அமைப்பாக இயங்க முடியாது.அதன் பள்ளிகளீல் பயிற்றுமொழி என்ன, கல்விமுறை எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதில் வரிசெலுத்தும் மக்களின், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரின் விருப்பை புறம்தள்ள முடியாது.தன் பிள்ளைக்கு தன்னலம், ஊரான் பிள்ளைக்கு பொதுநலம் என்றிருப்பது சுரண்டல்.என் குழந்தை ஆங்கிலவழி கல்வியில் படிக்கிறது.அதனால் நான் எல்லோரையும் ஆங்கில வழி கல்வியில் படிக்க அட்வைஸ் செய்வதில் அர்த்தம் இருக்கிறது.ராமதாசின் மகன் படித்தது ஆங்கிலவழி கல்வியில்..கான்வென்டில்.பேரபிள்ளைகள் படிப்பது கான்வெண்டில்.அவர் தமிழ்வழி கல்வியை பற்றி உபதேசிப்பது எத்தனை பெரிய முரண்பாடு மற்றும் சுரண்டல்?

எந்த எக்ஸ்கியூசும் சொல்லாமல் "என் பிள்ளைகள் தமிழ் வழி கல்வியில் படிக்கிறார்கள்" என்று சொல்லும் யாரும் தமிழ் வழி கல்வியை கட்டாயமாக்குவது பற்றி வாதிடும் முழு தகுதியும் உடையவர்கள் ஆகிறார்கள்.அப்படி செய்யாமல் தன் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் அடுத்தவன் பிள்லைக்கு தமிழ் என்பவர்கள் தம் நிலைபாட்டை மறுசிந்தனை செய்யும் அவசியம் உடையவர்களாகிறார்கள்

 
 
 

 
நான் தாய்மொழியில் படித்தவர்களின் தொழில்நுட்பத் திறமை பற்றி எழுதினேன்.  நீங்கள் யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள், யார் தொழில் முனைவோர்கள் என்று மேற்கோள் காட்டுகிறீர்கள்!  யார் கூடுதலாகப் பேடண்ட் பதிவு செய்திருக்கிறார்கள் தெரியுமா?
 
 
பொதுவாக உலகெங்கும் சீனர்கள் இந்தியர்களை விடக் கூடுதலாகவே தொழில் தொடங்குபவர்கள்.  ஆனால், அமெரிக்காவில் மட்டும் இந்தியர்கள் அவர்களை விஞ்சியிருக்கக் காரணம் ஆங்கில மொழியின் தேவையாக இருக்கலாம்.
 
பேடண்ட் பதிவு செய்வது ஆங்கிலப் பயிற்சி மட்டுமல்ல, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் திறமைக்குச் சான்று.  அதில் சீனர்கள் இந்தியர்களை விஞ்சியிருக்கிறார்கள்.
 
இந்த இந்தியர் எண்ணிக்கையையும் ஆங்கில மொழி வழிப் படித்தவர்கள், தாய்மொழி வழிப் படித்தவர்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டும். தாய் மொழி வழி படித்தவர்களின் எண்ணிக்கை 1995க்குப் பின் இந்தியாவிலிருந்து குடியேறியவர்களைக் கணக்கிடும்போது குறையத் தொடங்குகிறது.  அதற்கு முன்னர் குடியேறிய இந்தியர்களின் திறமையினால்தான், பின்னால் வந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிட்டின.



சீனர்கள் பேடண்ட் வாங்கிய சதவிகிதம் 26%. இந்தியர்கள் 21%. இதில் பெரிய வித்தியாசம் இல்லை. சீனர்கள் உலகமயமாக்கத்தை 1980ல் தொடங்கினர்.நாம் 1993ல் தொடங்கினோம்.அந்த 13 வருட கேப் தான் இது.

1980களிலேயே புரட்சிதலைவர் ஆங்கில வழி பள்ளிகளுக்கு, சுயநிதி கல்லூரிகளுக்கும் அனுமதி அளித்தார்.அதில் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்த மாணவர் கூட்டம் தான் இன்று அமெரிக்காவில் இந்த சாதனை புரிகிறது.என்.ஐ.ஐடியும், ஆப்டெக்கும் இந்த புரட்சியில் பெரும்பங்கு வகித்தன.


 
 
 
அமெரிக்காவின் குமிழி உடையும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?  இந்தியாவில் இப்போது ஊதிப் பெருத்துவரும் குமிழி மட்டும் உடையாதா என்ன?  பொருள் உற்பத்தித் திறனை சீனா எட்டிய அளவு வேறு எந்த வளரும் நாடும் எட்டியதில்லை.  
 
சீனாவில் வருங்காலத்தில் வாய்ப்பு வரும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் என் அமெரிக்க நண்பர்கள் பலர் தங்கள் குழந்தைகளை மேண்டரின் சீன மொழியைக் கற்க அனுப்பி வருகிறார்கள்!
 
வருங்காலத்தில் பல புதிய அறிவியல் கட்டுரைகள், தொழில்நுட்பத் திறன்கள் சீன மொழியில் பதிப்பிக்கப் படும் என்பது அவர்கள் நம்பிக்கை.  உங்கள் கருத்து வேறு.  ஆனால், இன்றைய அமெரிக்க ஆதிக்கம் தொடரும் என்று பல அமெரிக்கர்களே எதிர்பார்ப்பதில்லை.



அமெரிக்க ஆதிக்கம் என்பது வேறு,ஆங்கில ஆதிக்கம் என்பது வேறு.அமெரிக்கா விழுந்தாலும் பிசினஸ் மொழியாக,கல்வி மொழியாக ஆங்கிலம் தான் நீடித்திருக்கும்.ஆங்கிலத்தின் இடத்தை மாண்டரின் பிடிக்கும் என நினைப்பது வெறும் கனவு.

 
 

 
செல்வன்,  சீனர்கள், ஜப்பானியர், ரஷ்யர்கள் போன்ற பலர் ஆறு மாதத்தில் ஆங்கிலம் கற்றுக் கொண்டு அமெரிக்கா வருபவர்கள்தாம்.  பட்ட மேற்படிப்பாக இருக்கட்டும், தொடக்க நிலை பொறியாளராக இருக்கட்டும், அப்படி அமெரிக்கா வருபவர்கள்தாம் கூடுதல்.  இந்தியர்கள், பாகிஸ்தானியர், பிலிப்பினோக்கள் போன்ற சிலர் மட்டுமே ஆங்கில வழியில் படித்து அமெரிக்கா வந்த வேற்று இனத்தவர்.  இது அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த எவருக்கும் தெரிந்த செய்தி.


ஆனால் அப்படி வந்த இனங்கள் அனைத்தையும் விட ஆங்கிலம் படித்து வந்த இந்தியர்கள் தான் அதிகம் சாதனை படைக்கிறார்கள்.அதிகம் படிக்கிறார்கள்.அதிகம் சம்பாதிக்கிறார்கள்.ஆங்கில அறிவுதான் கணிணி,அவுட்சோர்சிங் என பல கதவுகளை இந்தியர்களுக்காக திறக்கிறது.அமெரிக்காவுக்கு வருவதென்றால் ஆங்கில அறிவு மிகபெரிய அட்வான்டேஜ்.

 
 
 
 
தமிழ்ப் பெற்றோர்களில் எத்தனை பேர் மாற்றலாகி வெளி மாநிலங்களுக்குப் போகிறார்கள்?  அப்படிப் பட்டவர்களுக்காக மொத்த தமிழ்நாடே மாறவேண்டும் என்று எதிர்பார்ப்பது கோணல் சிந்தனை.



நான் யாரையும் மாற சொல்லவில்லையே?தமிழ் வழி,ஆங்கில வழி என இரு கல்விமுறைகள் இருக்கவேண்டும்.அதில் எந்த வழிதிட்டத்தில் தம் பிள்ளைகளை சேர்ப்பது என்பது பெற்றோரின் உரிமையாக இருக்கவேண்டும்.அரசின் தலையீடு கூடாது.


 
 
 
அறிவு வேறு, எதைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை வேறு.  இந்தியாவின் ஆங்கில வழிக் கல்வி, அமெரிக்கப் பொருளாதாரச் சிந்தனையில், அமெரிக்க நிறுவனங்களுக்குச் சேவை செய்வதன் அடிப்படையில் செயல்படுகிறது.  இந்தியர்களுக்குச் சேவை செய்யத் தேவையான திறமைகளை அது வலியுறுத்துவதில்லை.  இது ஊரறிந்த ரகசியம்.



சைக்கலாஜி, சோஷியல் சைன்ஸ், ஹிஸ்டரி, கணிணி விஞ்ஞானம், பவுதீகம் போன்ற பாடங்களை ஆங்கில வழியாக மாணவர்களுக்கு கற்பிக்கிறார்கள்.இந்த பாடமெல்லாம் இந்தியாவுக்கு ஒத்துவராதா?  அமெரிக்காவுக்கு தன ஒத்துவருமா?கம்ப்யூட்டர் சயன்சை ஆங்கிலத்தில் படித்தால் அமெரிக்க சூழல்.தமிழில் படித்தால் இந்திய சூழலா?:-)))


 
 
ஐ.ஐ.டி.களை உருவாக்கியதன் நோக்கம் ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு அமெரிக்காவில் நல்ல வாழ்க்கை அமைப்பது மட்டுமே என்று நீங்கள்  கருதுகிறீர்கள்.  அப்படியானால், இந்திய அரசு இத்தனை கோடி ரூபாய் முதலிட்டு, சலுகையில் பயிற்சி தந்திருக்காது.  இப்போதும், ஐ.ஐ.எம். பயிற்சிக்கான கட்டணத்தை உயர்த்துவதை எதிர்த்து நடுத்தட்டு மக்கள் கொடி பிடிக்கிறார்கள்! இந்தியப் பொது மக்கள் உழைப்பில் எழுந்த பல்கலைக் கழகங்கள் இவை.  பயன்பெறுவது அமெரிக்கா.



ஐ.ஐ.டியின் நோக்கம் அதன் மாணவர்களுக்கு நல்ல கல்வியை அளிப்பது மட்டுமே.அவர்களை இந்தியாவில் தக்க வைப்பது நம் அரசின் கையில் தான் உள்ளது.ஐ.ஐ.டியின் கையில் இல்லை.மானவர்கள் தாமாக விரும்பி அமெரிக்கா சென்றால் அது ஐ.ஐ.டியின் குற்றமல்ல.

மாணவர்கள் எங்கே பணிக்கு செல்கிரார்கள் என்பது அவர்கள் விருப்பமே.ஐ.ஐடியில் படித்தால் இந்தியாவில் வேலை செய்யவேண்டும் என கட்டாயபடுத்துவது கொத்தடிமை முறைக்கு சமமானது.எனக்கு விருப்பமான எந்த இடத்திலும் வேலை செய்வது என் உரிமை.ஐ.ஐ.டியில் படிப்பது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற வரி செலுத்தும் குடிமகன் எனும் முறையில் என் அடிப்படை உரிமை
 
 

  
தனியார் பள்ளிகள் சந்தைக் கோட்பாட்டில் தற்போதைய தேவைக்கேற்ப விற்பனை செய்பவை.  மாணவர்கள் வருங்காலம் பற்றிக் கவலை கொள்பவையாக எனக்குத் தெரியவில்லை.  மனப்பாடம் செய்து மார்க் வாங்க வைக்கும் உருத்தட்டுப் பள்ளிகள்தாம் கூடுதல்.
 


கல்விதுறையின் கட்டுபாடிலிருந்து தனியார் பள்ளிகளை விடுவித்து அவை தம் விருப்பம் போல் பாடங்காளை கற்பிக்கலாம் என அனுமதித்தால் அப்புறம் தனியார் பள்ளிகள் மாபெரும் சாதனைகளை செய்யும்.அதுவரை சந்தையின் தேவையை நிறைவேற்றுவதே அவர்கள் மக்களுக்கு செய்யும் மிகபெரும் சேவைதான்
 
 

தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நடத்தும் பள்ளிகள் தமிழ்நாட்டின் பயனுக்காகச் செயல்படும் கடமைப்பட்டவை.  அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தேவை இல்லாதவை.
 

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சான் ரமோன், கலிஃபோர்னியா

ஏற்றுமதி செய்யப்பட்டவரே ஏற்றுமதியை தடுப்பது முரண்பாடு:) நான் ராமானுஜர் மாதிரி.நான் பெற்ற இன்பம் பெறூக இவ்வையகம் என கோபுரத்தின் மேலேறி நின்று கூவுவேன்...அமெரிக்கா சொர்க்கம்.இந்திய இளைஞர்களே கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி அமெரிக்கா வாருங்கள்.உங்களுக்கு எங்கே வய்யப்புகள் கிடைக்கிறதோ அங்கே செல்லுங்கள்.உங்கள் வாழ்க்கையை வளபடுத்திகொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.மொழியை முன்னேர்றுகிறேன் என்று சொல்லி உங்களை அடிமைபடுத்த நினைப்பவர்களின் எண்ணங்களுக்கு பலியகாதீர்கள்.தமிழ் வழி கல்வி உங்களுக்கு பிடிக்கிறதா படியுங்கள்.ஆங்கில வழி கல்வி பிடிக்கிறதா படியுங்கள்.இந்தியாவில் நல்ல வேலை கிடைக்கிறதா இங்கேயே இருங்கள்.அமெரிக்காவில் கிடைக்கிறதா எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி அங்கே செல்லுங்கள்.நீங்கள் நன்றாக இருப்பது தான் முக்கியம்.உங்கள் பிள்ளைகளை நன்றாக வாழவைப்பதுதான் முக்கியம்.ஏழையாக நீங்கள் பிறந்திருக்கலாம்.அது உங்கள் குற்றமல்ல.ஆனால் ஏழையாக நீங்கள் இறந்தால் அது உங்கள் குற்றம் தான்
--
செல்வன்

www.holyox.tk

"This is America.We don't redistribute wealth.You earn it"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment