லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்திற்கு சென்ற காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், அங்கு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த ராகுல், அங்குள்ள கிராமம் ஒன்றில் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுடன் கலந்துரையாடினார். பின்னர் பாபினா தாலுக்காவில் உள்ள கோவாலி கிராமத்திற்கு சென்ற ராகுல், அங்கு பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த துவாரிகா பிரசாத் ரெய்க்வார் மற்றும் ரேகா தேவி கேவத் என்ற தம்பதியரின் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார். தொழிலாளியான ரெய்க்வாரின் மனைவி, சுய உதவிக் குழுவில் தீவிரமாக பங்காற்றி வருகிறார். அவர் ராகுலுக்கு பருப்பு, பட்டாணி, உருளைக்கிழங்கு குருமா, பூரி மற்றும் சாதம் போன்றவற்றை பரிமாறினார். அந்த குடும்பத்தினருடன் ஒரு மணி நேரத்தை செலவிட்டார் ராகுல். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுல் தங்களின் வீட்டிற்கு வந்தது பற்றி ரெய்க்வார் கூறுகையில், "ராகுல் எங்கள் வீட்டில் பருப்புடன் பூரி சாப்பிட்டார். நாட்டில் நடக்கும் ஊழல், சமூகத்தில் நிலவும் சாதி முறை போன்றவை பற்றி அவரிடம் தெரிவித்தோம். "இந்த சாதி முறை மற்றும் ஊழலால், ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினர் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறினோம். பின்னர் எங்களின் குடும்ப பிரச்னைகளை தெரிவித்தோம். நாங்கள் பேசியதை எல்லாம் ராகுலுடன் வந்தவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர்' என்றார்.
உட்கட்சி சண்டை வேண்டாம்: ""காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்ற வேண்டும். வரக்கூடிய உ.பி., மாநில சட்ட மேலவை தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற உழைக்க வேண்டும்,'' என, ராகுல் கேட்டுக் கொண்டார். அமேதி, ரேபரேலி மற்றும் சுல்தான்பூர் ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் பேசிய அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "உட்கட்சி பூசல் கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக் கூடாது. கீழ்மட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மேலவை தேர்தலில் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இதில், எந்த வகையிலும் மெத்தனம் கூடாது' என்றார்.
--
செல்வன்
www.holyox.tk
"This is America.We don't redistribute wealth.You earn it"
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment