மானநட்ட வழக்கிற்கும், இணைய குற்ற வழக்கிற்க்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் விளக்கலாமே.
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
2009/12/22 நலம் பெறுக <nalamperuga@gmail.com>
பாவம் cyber crime அதுக்கு இப்படி தன்னைக் குறித்து தப்பர்த்தம் செய்து கொள்வார்கள் என தெரியுமா தெரியாதா தெரியவில்லை
i pitty cyber crime
நபெ2009/12/22 புலவர். அசோக் <ashokk757@gmail.com>
ஐயா,
அடிக்கு பயப்படும் மற்றும் சட்டத்தை மதிக்கும் ஒரு சாதாரண குடிமகன் நான். சட்ட விரோதமாக நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியாவிட்டாலும், என்னை உங்களால் துன்பத்தில் ஆழ்த்த முடியும் என்பதை நான் கட்டாயம் ஒப்புக் கொள்கிறேன்.
தங்களுக்கு மன வருத்தம் கொடுத்ததற்கு என் மனதார மன்னிப்பு கேட்கின்றேன்.
இனிமேல் இந்தக் குழுமத்தில் எழுத மாட்டேன். உங்களுக்கு திருப்தி தானே?
நட்புடன்,
புலவர். அசோக்2009/12/22 Abdul Jabbar <abjabin@gmail.com>
நானும் ராஜாசங்கரும் கருத்துக்ளை பகிர்ந்து கொண்டிருந்தோம். இதில் எந்த இடத்திலும் நானோ அவரோ
தவறுதலாக எதுவும் எழுதவில்லை. நான் அப்படி எழுதுபனும் அல்ல.
இதில் புலவர் அசோக் இடையில் புகுந்து கருத்துச் சொல்லலாம். அதில் தவறு இல்லை. ஆனால் அவர் என்ன
செய்கிறார். எவ்வித காரணமும் இல்லாமல் என்னை இழிவு படுத்தும் வித்மாக "நீர் ஒரு மொக்கை ஆளுய்யா"
என்று ஒருமையில் விழித்து என்னைக் கேவலப் படுத்தும் விதமாக எழுதுகிறார்.
அதையாவது போகட்டும் என்று விட்டால் கடைசியில் , " வயது ஆக ஆக அறிவு வளரும். ஆனால் அது
இருந்தால் தானே வளரும்" என்று முடிக்கிறார்.
இது என் தன் மானத்துக்கும் சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவால் இல்லையா ? இதை ஏன் அவர் செய்தார் ?
நான் அவருக்கோ அல்லது வேறு யாருக்கொ என்ன தவறு செய்தேன். எங்களுக்குள் என்ன பகை ? பிறகு ஏன்
இப்படி எழுதினார்...?
தொடர்ந்து அவர் எழுதுவதை அவர் என்னைப்பற்றித்தான் எழுதுகிறார் என்று நான் கற்பனை செய்து கொள்ளத்
தேவை இல்லை.தயாரும் இல்லை
ஆனால், அவர் என்னை இழிவு படுத்தியதை வைத்து சென்னை மாநகர காவல் துறை ஆணையரின்
கட்டுப்பாட்டிலுள்ள Cyber Crime Branch - ல் புகார் செய்தால் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று
நண்பர்கள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு கீழிறங்கிப் போக நான் விரும்பவ்ல்லை. இன்றில்லாவிட்டால்
என்றாவது ஒரு நாள் அவர் என்னை இழிவு படுத்தியதற்கா வருந்தக் கூடும். அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது..
இதில் இரண்டை எதிர்பார்க்கலாம். ஒன்றில் தான் செய்தது தவறுதான் என்று உணரக்கூடும். அதற்கு ரொம்பப்
பெரிய மனசு தேவை. இன்னொன்று முன்பை விட அவர் எகிறக் கூடும். அது யாராலும் முடியும்.
நான் ஒன்றே ஒன்றுதான் சொல்வேன். வாழ்க்கையில் "முற்பகல்" என்று மட்டுமல்ல 'பிற்பகல்" என்ற ஒன்றும்
இருக்கிறது. முற்பகலில் செய்த வினை பிற்பகலில் விளையவே செய்யும். புலவர் அசொக்குக்கு அப்படி
எதுவும் நிகழாதிருக்கட்டும்.
எனக்கு யார் மீதும் அழுக்காறு இல்லை. அதனால் தான் இந்த வயதிலும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும்
இருக்கிறேன் என் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் ஏராளம். சில சமயங்களில் புலவர் அசோக்
போன்ற நண்பர்கள் இப்படி வந்து உரசி காயப்படுத்துவதுண்டு. அவர்களைப் போன்றவர்களைப் ப்ற்றிக் கவலைப் பட எனக்கு நேரமில்லை.
இத்தனைக்குப் பிறகும் அவர் ஒரு நல்ல மனிதராக என்னுடன் நட்பு பாராட்டலாம். அல்லது அவர் விருப்பம்.
அவரே சொல்வது போல் நான் என் வயதைச் சொல்லி மரியாதையை Demand பண்ண முடியுமா என்ன் ?
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
யாதும் ஊரே..!! யாவரும் கேளிர்...!!!
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment