Tuesday, December 22, 2009

Re: [தமிழமுதம்] ஆங் கில வழி கல் விக்கு ஆத ர வாக செயல் ப டும் தமி ழக அரசு : ராம தாஸ் குற் றச் சாட்டு

2009/12/22 செல்வன் holyape@gmail.com

2009/12/22 Mani Manivannan <mmanivannan@gmail.com>

அடுத்த தலைமுறை அமெரிக்காவுக்குப் பணி புரிய வேண்டுமா, அல்லது தமிழ்நாட்டுக்குப் பணி புரிய வேண்டுமா என்பதில் தெளிவாக இருந்தால் இதற்கு விடை கிடைக்கும்.

எந்த தலைமுறையும் தனக்காக தான் பணீபுரியவேண்டும்.அதாவது தனக்கு எங்கே அதிகம் முன்னேற வாய்ப்புக்கள் உளதோ அங்கே
 
 
தன்னலம் என்பது கொள்கை அல்ல.  இயல்பு.  அடுத்த தலைமுறை, வருங்காலம் என்பவற்றைப் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றத் தன்னலம் வழி வகுப்பதில்லை.  அதனால்தான், அத்தகைய பொறுப்புகளை அரசுகளும், பொதுநல நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அரசு நடத்தும், அல்லது உதவி செய்யும் மொழி வழிப் பள்ளிகள் பற்றிய கொள்கைகள் அடுத்த தலைமுறை பற்றித்தான் இருக்க வேண்டும்.
 
 
 
 
சீனக் குழந்தைகள் ஆங்கிலமும் கற்றுக் கொண்ட பின்னர், இந்தியாவின் மென்கலப் பணி ஆளுமைக்குப் போட்டி வந்து விடும்.  நான் பார்த்த வரையில் தாய்மொழியில் கல்வி கற்ற சீனர்கள் ஆங்கிலத்தில் கற்ற இந்தியர்களை விடத் திறமையானவர்கள்.  அவர்களுக்கோ இந்தியர்கள் "நல்ல" ஆங்கிலம் பேசுவதும், எழுதுவதும் வியப்பளிக்கிறது.  அமெரிக்காவில் மேலாள் பதவிகளுக்கு ஆங்கிலப் புலமை அடிப்படைத் தேவை.  தொழில்நுட்ப வல்லமையில் சீனர்கள் சிறந்திருப்பதற்கு ஓர் அடிப்படைக் காரணம் தாய்மொழிக் கல்வி.


அது தவறான கருத்து.அமெரிக்கவாழ் இந்தியர்கள் தான் அமெரிக்காவில் அதிகம் சம்பாதிப்பவர்கள்/படிப்பவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் வருபவர்கள்.

 http://en.wikipedia.org/wiki/Indian_Americans#Statistics_on_Indians_in_the_US

A joint Duke University - UC Berkeley study revealed that Indian immigrants have founded more engineering and technology companies from 1995 to 2005 than immigrants from the U.K., China, Taiwan and Japan combined.[13]

 
நான் தாய்மொழியில் படித்தவர்களின் தொழில்நுட்பத் திறமை பற்றி எழுதினேன்.  நீங்கள் யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள், யார் தொழில் முனைவோர்கள் என்று மேற்கோள் காட்டுகிறீர்கள்!  யார் கூடுதலாகப் பேடண்ட் பதிவு செய்திருக்கிறார்கள் தெரியுமா?
 
 
 

U.S. residents from China and Taiwan combined made up the largest group of patent filers, with 26.8 percent of filings, followed by Indians with 21 percent.

That contrasts with the leading position Indian immigrants hold as founders of technology and engineering businesses, according to other study findings. Indians founded or co-founded 26 percent of startups from 1995 to 2005. Chinese founded 6.9 percent and Taiwanese 5.8 percent.

"The Indians start many more companies than the Chinese do, but the Chinese file many more patents than the Indians do," said Vivek Wadhwa

பொதுவாக உலகெங்கும் சீனர்கள் இந்தியர்களை விடக் கூடுதலாகவே தொழில் தொடங்குபவர்கள்.  ஆனால், அமெரிக்காவில் மட்டும் இந்தியர்கள் அவர்களை விஞ்சியிருக்கக் காரணம் ஆங்கில மொழியின் தேவையாக இருக்கலாம்.
 
பேடண்ட் பதிவு செய்வது ஆங்கிலப் பயிற்சி மட்டுமல்ல, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் திறமைக்குச் சான்று.  அதில் சீனர்கள் இந்தியர்களை விஞ்சியிருக்கிறார்கள்.
 
இந்த இந்தியர் எண்ணிக்கையையும் ஆங்கில மொழி வழிப் படித்தவர்கள், தாய்மொழி வழிப் படித்தவர்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டும். தாய் மொழி வழி படித்தவர்களின் எண்ணிக்கை 1995க்குப் பின் இந்தியாவிலிருந்து குடியேறியவர்களைக் கணக்கிடும்போது குறையத் தொடங்குகிறது.  அதற்கு முன்னர் குடியேறிய இந்தியர்களின் திறமையினால்தான், பின்னால் வந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிட்டின.
 
 
இன்னும் இருபது ஆண்டுகள் கழித்துப் பொருளாதாரத்தில் உயர்நிலை வகிக்கப் போவது சீனா.  அமெரிக்காவைப் போல் கதவைத் திறந்து வைத்து வெளிநாட்டுத் திறமையை அவர்கள் வரவேற்க மாட்டார்கள்.  தங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் உலகோடு சீனர்கள் பகிர்ந்து கொள்ளத் தயங்குவார்கள்.


சீனாவின் பப்பிள் இன்னும் நாலைந்து ஆண்டுகளில் உடையும்.அது அடிப்படையில் உற்பத்தி பொருளாதாரம்.அங்கே ஒயிட்காலர் வேலைகள் அதிகம் உருவாகபோவதில்லை.சீனாவின் ஆறுகளும், சுற்றுபுஇறசூழலும் இப்போதே இந்த உற்பத்தியால் மூச்சுதிணறுகின்றன.மற்றபடி புரியாத மொழி,கலாசாரம், ஜனநாயக் மறுப்பு என இருக்கும் சீனாவில் அவர்களே வலியுறுத்தி கூப்பிட்டாலும் அந்த நாட்டுக்கு போக யாரும் தயாராக இல்லை.
 
 
அமெரிக்காவின் குமிழி உடையும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?  இந்தியாவில் இப்போது ஊதிப் பெருத்துவரும் குமிழி மட்டும் உடையாதா என்ன?  பொருள் உற்பத்தித் திறனை சீனா எட்டிய அளவு வேறு எந்த வளரும் நாடும் எட்டியதில்லை.  
 
சீனாவில் வருங்காலத்தில் வாய்ப்பு வரும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் என் அமெரிக்க நண்பர்கள் பலர் தங்கள் குழந்தைகளை மேண்டரின் சீன மொழியைக் கற்க அனுப்பி வருகிறார்கள்!
 
வருங்காலத்தில் பல புதிய அறிவியல் கட்டுரைகள், தொழில்நுட்பத் திறன்கள் சீன மொழியில் பதிப்பிக்கப் படும் என்பது அவர்கள் நம்பிக்கை.  உங்கள் கருத்து வேறு.  ஆனால், இன்றைய அமெரிக்க ஆதிக்கம் தொடரும் என்று பல அமெரிக்கர்களே எதிர்பார்ப்பதில்லை.
 

 
 
அமெரிக்கா தற்போது இறங்குமுகமாக இருக்கிறது.  இந்தச் சரிவை அமெரிக்கர்கள் நிறுத்தி விட்டாலும், கதவுகளை எவ்வளவு நாள் திறந்து வைப்பார்கள் என்பது கேள்விக் குறி.


உலகம் மிக பெரியது.கையில் வித்தை இருந்தால் புவனம் முழுவதும் வாசலை ஒருவனுக்கு திறந்து வைக்கும்.இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவே அமெரிக்கா, சீனாவை மிஞ்சும் வகையில் வளரலாம்.வெளிநாடு போகும் அவசியமே வராது
 
 
இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் ஏதும் இல்லை.  அடிப்படைத் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா பெரிதும் பின் தங்கியிருக்கிறது.  இந்தியப் பல்கலைக் கழகங்களின் மேற்பட்டப் படிப்பு, முனைவர் பட்ட ஆராய்ச்சிகளைப் பற்றிய புள்ளிவிவரங்களைப் பாருங்கள்.  அடிப்படை ஆராய்ச்சி இல்லாமல் எந்த நாடும் முன்னேற இயலாது.

 
 
 
தமிழர்களுக்குத் தற்போதைக்கு ஆங்கிலம் நல்ல வாய்ப்புகளைத் தருகிறது என்பதில் ஐயமில்லை.  ஆனால், இத்தகைய வாய்ப்புகள் வருங்காலத்திலும் வெகு குறைவான ஆட்களுக்கு மட்டுமே இருக்கும்.  ஆறு மாதத்துக்குள் ஆங்கிலத்தை எழுத, பேசக் கற்றுக் கொள்ளலாம்.  ஆனால், அடிப்படைக் கல்வி அப்படியல்ல.


ஆறு மாதத்தில் ஆங்கிலம் கற்றுகொண்டு அமெரிக்கா போய்விடலாமா?ஜோக்கா?:))
 
 
செல்வன்,  சீனர்கள், ஜப்பானியர், ரஷ்யர்கள் போன்ற பலர் ஆறு மாதத்தில் ஆங்கிலம் கற்றுக் கொண்டு அமெரிக்கா வருபவர்கள்தாம்.  பட்ட மேற்படிப்பாக இருக்கட்டும், தொடக்க நிலை பொறியாளராக இருக்கட்டும், அப்படி அமெரிக்கா வருபவர்கள்தாம் கூடுதல்.  இந்தியர்கள், பாகிஸ்தானியர், பிலிப்பினோக்கள் போன்ற சிலர் மட்டுமே ஆங்கில வழியில் படித்து அமெரிக்கா வந்த வேற்று இனத்தவர்.  இது அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த எவருக்கும் தெரிந்த செய்தி.
 
 

அடிப்படை கல்வியை ஆங்கிலத்தில் படித்தால் எந்த பிரச்சனையும் கிடையாது.தமிழில் படித்தால் நடுவே பெற்றோருக்கு வேறு மாநிலத்தில் மாற்ரலாகி போனால் சற்று சிக்கல்.அப்படி மைக்ரேஷன் ஆகும் வாய்ப்புகள் இல்லையென்றால் அடிப்படை கல்வி எந்த மொழியில் படித்தாலும் பிரச்சனையில்லை
 
 
தமிழ்ப் பெற்றோர்களில் எத்தனை பேர் மாற்றலாகி வெளி மாநிலங்களுக்குப் போகிறார்கள்?  அப்படிப் பட்டவர்களுக்காக மொத்த தமிழ்நாடே மாறவேண்டும் என்று எதிர்பார்ப்பது கோணல் சிந்தனை.

 
மக்களுக்குத் தேவையானவை எவை, தம் சூழலில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது எப்படி என்பது போன்ற சிந்தனைகளுக்கு ஆங்கிலக் கல்வி மற்றும் போதாது..


ஏன் போதாது?எந்த மொழியில் கற்றாலும் அறிவு வளரத்தான் செய்யும்.
 
 
அறிவு வேறு, எதைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை வேறு.  இந்தியாவின் ஆங்கில வழிக் கல்வி, அமெரிக்கப் பொருளாதாரச் சிந்தனையில், அமெரிக்க நிறுவனங்களுக்குச் சேவை செய்வதன் அடிப்படையில் செயல்படுகிறது.  இந்தியர்களுக்குச் சேவை செய்யத் தேவையான திறமைகளை அது வலியுறுத்துவதில்லை.  இது ஊரறிந்த ரகசியம்.
 

 
ஐ.ஐ.டி. கழகங்களில் போட்ட முதலீட்டில் இந்தியாவுக்கு எவ்வளவு லாபம், அமெரிக்காவுக்கு எவ்வளவு லாபம்?


இந்தியர்களுக்கு அதில் லாபம்.ஐ.ஐ.டி இயங்குவது இந்தியர் நலனுக்கு.அதில் படித்த இந்தியர் வாழ்க்கையில் நன்கு முன்னேறினார்கள்.ஆக அது தன் குறிகோளை எட்டிவிட்டது.
 
 
ஐ.ஐ.டி.களை உருவாக்கியதன் நோக்கம் ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு அமெரிக்காவில் நல்ல வாழ்க்கை அமைப்பது மட்டுமே என்று நீங்கள்  கருதுகிறீர்கள்.  அப்படியானால், இந்திய அரசு இத்தனை கோடி ரூபாய் முதலிட்டு, சலுகையில் பயிற்சி தந்திருக்காது.  இப்போதும், ஐ.ஐ.எம். பயிற்சிக்கான கட்டணத்தை உயர்த்துவதை எதிர்த்து நடுத்தட்டு மக்கள் கொடி பிடிக்கிறார்கள்! இந்தியப் பொது மக்கள் உழைப்பில் எழுந்த பல்கலைக் கழகங்கள் இவை.  பயன்பெறுவது அமெரிக்கா.
 

 
 
தனியார் பள்ளிகள் சந்தைக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் செயல்படட்டும்.
 
அரசுப் பள்ளிகளும், அரசு மானியப் பள்ளிகளும், தமிழ்நாட்டின் வருங்காலத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மாணவர்களின் வருங்காலம்?..தனியார் பள்ளிகள் மாணவர்களின் வருங்காலத்தை கவனத்தில் கொள்கின்றன.அரசு பள்ளிகள் அரசு இயந்திரத்தின் வருங்காலத்தை கவனத்தில் கொள்கின்றன
 
 
தனியார் பள்ளிகள் சந்தைக் கோட்பாட்டில் தற்போதைய தேவைக்கேற்ப விற்பனை செய்பவை.  மாணவர்கள் வருங்காலம் பற்றிக் கவலை கொள்பவையாக எனக்குத் தெரியவில்லை.  மனப்பாடம் செய்து மார்க் வாங்க வைக்கும் உருத்தட்டுப் பள்ளிகள்தாம் கூடுதல்.
 
 
இணையம் எழுவதற்கு முன்னர் தமிழ் சோறு போடுமா என்ற கேள்விகள் இருந்தன.  இப்போது இணைய வாணிகர்கள் பலருக்குத் தமிழ் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.
 
இன்றும் சன் டிவி கொடி கட்டிப் பறப்பதற்கு ஒரே காரணம் - தமிழ்.
 
அதை மாறன் மறந்திருக்கலாம்.  மர்டாக் மறக்கவில்லை.
 


தமிழ்நாட்டில் தமிழ் பயன்படும் என்பது மறுக்க இயலாத உண்மை.தமிழ்நாட்டில் மட்டும் அத்தனை வாய்ய்ப்புக்கள் இல்லை என்பதும் உண்மை.
 
தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நடத்தும் பள்ளிகள் தமிழ்நாட்டின் பயனுக்காகச் செயல்படும் கடமைப்பட்டவை.  அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தேவை இல்லாதவை.
 

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சான் ரமோன், கலிஃபோர்னியா

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment