Monday, December 21, 2009

Re: [தமிழமுதம்] மின் ஆளுகை: உங்கள் பதில்கள் தேவை



21 டிசம்பர், 2009 7:06 am அன்று, Annakannan <annakannan@gmail.com> எழுதியது:
அன்பு நண்பர்களுக்கு,

சென்னை பச்சையப்பன் கல்லூரியில், தமிழில் மின் ஆளுகை (e-Governance in
Tamil) என்ற தலைப்பில், முனைவர் வா.மு.சே.ஆண்டவர் வழிகாட்டுதலில்,
முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். என் ஆய்வு தொடர்பாகப் பின்வரும்
வினாக்களுக்கு உங்களிடமிருந்து பதில்களை எதிர்பார்க்கிறேன். இவற்றுக்கு
உங்கள் பதில்களை இயலுமானால் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உடன்
அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

1. இந்திய - தமிழக அரசுகளின் எந்த எந்த இணையதளங்களை நீங்கள்
பயன்படுத்தியுள்ளீர்கள்?

தமிழக அரசு வலைத்தளம் பார்ப்பேன். புள்ளீ விவரங்களுக்காக.

2. பதிவுத் துறை, காவல் துறை, உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர்
பாதுகாப்புத் துறை, மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் & கழிவுநீர்
அகற்றல் வாரியம், வேளாண்மை, கல்வி, தொலைபேசி, போக்குவரத்து, சுற்றுலா,
ரெயில்வே, வருமான வரித் துறை, மாநகராட்சி / நகராட்சி.... போன்ற அரசு
இணைய தளங்களுக்குச் சென்று தகவல்களையும் சேவைகளையும் பெற்றதுண்டா?

3. மின் ஆளுகை மூலம் நீங்கள் பெற்ற பயன்கள் என்னென்ன? இதன் மூலம் இலஞ்சம்
- ஊழல் இல்லாத, விரைவான, வெளிப்படையான, சிக்கனமான, சிறப்பான சேவையைப் பெற
முடியும் என நம்புகிறீர்களா?


கட்டாயம். ஊழல் ஒழிய இது மிக சிறந்த வழி
 
4. நீங்கள் அறிந்த வரை, மின் ஆளுகையை அறிமுகப்படுத்தியபின் அரசு
ஊழியர்களின் இயல்பில், பணித் திறனில், பொறுப்பில் ஏதும் மாற்றம்
நிகழ்ந்துள்ளதா?


தொடர்வண்டி பயணசீட்டு வாங்கியுள்ளேன். மிக எளீய முறை

 
5. இந்திய - தமிழக அரசுகளின் இணையதளங்களுள் எவை எவை தமிழில் இருந்தன?
அவற்றின் நிறைகள் / குறைகள் என்னென்ன?



தமிழ்பல்கலை மிக மட்டம். அது என்ன குறியீட்டை பயன்படுத்டுகிறதோ?
பழம் தமிழ் நூல்கள் எல்லாம் பிற தளங்களில்தான் வாசிக்க முடிகிறது
 முதலில் அதை சரி செய்யுங்க அண்ணாகண்ணன்

6. அரசு இணைய தளங்கள் தமிழில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?
ஏன்?


இருமொழிகளிலும் இருக்கட்டும்
 
7. இணைய தளங்கள் வழி பணப் பரிமாற்றம் செய்து, பொருள்கள் / சேவைகளைப்
பெற்றுள்ளீர்களா? அதைப் பாதுகாப்பாக உணருகிறீர்களா?


எனக்கு பொருந்தாது. நான் அயலகம்'
 
8. மின்னஞ்சல் மூலம் அரசுக்குப் புகார் / தகவல் அளித்தது உண்டா? அதன்
மீது எவ்வளவு காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பெற்றது?

 
9. செல்பேசிவழியே அரசிடமிருந்து தகவல்களை / சேவைகளைப் பெற்றது உண்டா?
அரசுக்குத் தகவல் / புகார் அனுப்பியது உண்டா? அதன் மீது எவ்வளவு
காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பெற்றது? செல்பேசி வழியே பணப் பரிமாற்றம்
செய்துள்ளீர்களா? அதைப் பாதுகாப்பாக உணருகிறீர்களா?

10. அரசு இணையதளங்களையும் மின் ஆளுகை முயற்சிகளையும் இன்னும்
எளிமைப்படுத்த வேண்டுமா? எவ்வாறு?

11. மின் ஆளுகையை மக்கள் அதிகம் பயன்படுத்த, அவர்களை எவ்வாறு
பயிற்றுவிக்கலாம்?


பள்ளிபருவத்திலேயே பயிற்சி கொடுக்கணும். தமிழ் தட்டச்ச்ச அறியாத கல்லூரி தமிழ் பேராசிர்யர்கள்தான் எல்லாரும்
12. தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில், இந்தியாவுக்கு வெளியே இதர
நாடுகளில் மின் ஆளுகை (e-Governance) எவ்வாறு உள்ளது? அவற்றுள் எதையேனும்
நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்களா? அந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.

13. அரசு இணைய தளங்களில் இன்னும் என்னென்ன சேவைகளை எதிர்பார்க்கிறீர்கள்?


எல்லாமே வீட்டில் அமர்ந்தபடி நடக்கணும்

 
உங்கள் பதில்களை annakannan@gmail.com என்ற முகவரிக்குக் கூடிய விரைவில்
அனுப்புங்கள். பதில்களுடன் உங்கள் பெயர், பணி, நாடு, மின்னஞ்சல் முகவரி
ஆகிய விவரங்களையும் இணைத்தால் உதவிகரமாக இருக்கும்.

வாய்ப்பிருப்பின், இதனை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி, அவர்களையும்
பதில் அளிக்கக் கோரலாம்.

தமிழில் மின் ஆளுகை தொடர்பான இதர தரவுகள், கோப்புகள், அனுபவங்கள்
உங்களிடம் இருந்தால் என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இந்த முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறேன்.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment