~காமேஷ்~
2009/12/22 NilaRaseegan <nilaraseegan@gmail.com>
இதனால் சகலமானவர்களுக்கும்..
நேற்று மாலை சிறுகதை நூல்வெளியீடு சிறப்பாக நிகழ்ந்தேறியது. மாலை 6 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சில் 27 நூல்களை திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டது. இசைக்கவிஞர் ரமணன் அவர்கள் சிறப்பாக தொகுத்தளித்தார். காவல்துறை உயர் அதிகாரி திரு.இரவி என் நூலிற்கான அறிமுகத்தை மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார். எழுத்தாளர் இந்துமதி நூலை வெளியிட்டார். எழுத்துலக ஜாம்பவான்கள் நாஞ்சில் நாடன்,புஷ்பா தங்கதுரை,விக்கிரமன்,கவியோகி,பிலிம் நியூஸ் ஆனந்தன் என்று பலரும்
விழாவில் கலந்து கொண்டது மகிழ்வாக இருந்தது.
விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் விழியன்,கார்த்திக் பிரபு,முத்துசாமி,முத்தலிப்,விஷ்ணுகுமார்,சிவன்,படைப்பாளி,சுரேஷ்,சுகந்தராஜ்,அடலேறு,எவனோ ஒருவன்,லக்கிலுக்,அதிஷா,நாவிஷ்செந்தில்குமார்,ஆனந்தகுமார்,உமாஷக்தி,யோசிப்பவர்,சுந்தர்,விஜி,ப்ரியா,ரோகினி,குமார்,பேராசிரியர் செல்வகுமார்,குகன்,கவிஞர்.அண்ணா கண்ணன்,ஐயா அப்துல் ஜப்பார்,எழுத்தாளர் சைலஜா ஆகியோருக்கும்,விழாவில் கலந்துகொள்ள நினைத்து இயலாமல் மடலிலும் அலைபேசியிலும் வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் நட்பும் எப்போதும்.
சில நெகிழ்வான சம்பவங்களால் இந்நிமிடமும் மனம் பூரிப்புடன் இருக்கிறது.
சம்பத் என்றொருவர் என் க(வி)தைகள் படித்துவிட்டு மடலிடுவார். அவர் ஏதோ இருபது இருபத்தைந்து வயதுக்காரர் என்றே எண்ணியிருந்தேன். நேற்று ஒரு அறுபது வயது பெரியவர் என்னருகே வந்து கரம்பற்றி "உங்களை பார்க்கணும்னுதான் தம்பி வந்தேன்…என் பெயர் சம்பத்" என்றபோது சிலிர்த்துவிட்டது மனம். தமிழுக்கு நன்றி சொன்னோம் இருவரும்.
அதேபோல் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணணையாளரும் எழுத்தாளருமான அப்துல் ஜப்பார் அவர்கள் அமீரகத்தில் ஆசிப் அண்ணாச்சியுடன் இருக்கிறார் என்ற நினைப்பிலேயே அவரை விழாவிற்கு அழைக்காமல் விட்டுவிட்டேன். அவர் "குழுமங்களில் விழா குறித்தான செய்திகண்டு கலந்துகொண்டேன்" என்றபோது குற்றவுணர்வுடன் கூடிய ஆனந்த அதிர்ச்சி என்னை ஆட்கொண்டது.
விழாமுடிந்து வீட்டிற்கு வந்து இறங்கிய மறுநிமிடம் தொலைபேசிய முத்துசாமி,சிவன்,முத்தலிப் அனைவரும் அதற்குள் சிறுகதை தொகுப்பை படித்துவிட்டதாக சொல்லி சிறுகதைகள் குறித்துபேசிய போது இதயம் நெகிழ்ச்சியால் நிறைந்துபோனது.
ஈரோடு பதிவர் சந்திப்புக்கு சென்றுவிட்டதால் விழாவில் கலந்துகொள்ள முடியாத கவிஞர்.கேபிள் சங்கர் இரவு 11 மணிக்கு அழைத்து வாழ்த்தியதும்,
பின்னிரவு 3 மணிக்கு நாவிஷ் செந்தில்குமார் தொகுப்பின் முதல் கதையின் பாதிப்பிலிருந்து மீளமுடியவில்லை என்று மடலிட்டிருந்ததும்,
வீடு வருவதற்குள்ளாகவே விழாவில் எடுத்த புகைப்படங்களை மடலிட்ட விஷ்ணுகுமாரின் அன்பிலிருந்தும்,
மும்பையிலிருந்து தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த கவிஞர்.விபாகையின் நட்பிலிருந்தும் இன்னும் மீளவேயில்லை நான்.
பெருகியோடிய மகிழ்ச்சிக்கு மத்தியிலும் எழுத்தாளர்.ஷைலஜா அவர்களின் கைக்கடிகாரம் தொலைந்துபோனதும் விழா முடிந்த மகிழ்விலும் 120 பிரதிகள் விற்ற களிப்பிலும் U turn எடுக்கக்கூடாத இடத்தில் எடுத்ததால் ஒரு "நல்ல" காவலருக்கு 200 ரூபாய் கப்பம் கட்டியதும் நண்பர்கள் ஒவ்வொருவராக விழா அரங்கினுள் நுழையும்போது இப்போது வருவாரா இப்போது வருவாரா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசி வரை வராமல் போன ஒரு நல்லவரின் நேசமும் மனதை நெருடிய விஷயங்கள்.
பின்குறிப்புகள்:
1.நன்றி நவிழ்தலில் என் மறதியால் யாருடைய பெயராவது விடுபட்டிருப்பின் மன்னித்து மறந்துவிடுங்கள் :)
2.சிறுகதை நூல் இணையம் வழியே கடன் அட்டை மூலமாக பணம் செலுத்தி வாங்கிக்கொள்ள விரும்பும் அன்பர்கள் இங்கே சுட்டுங்கள்.
3.சென்னையில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடைபெற இருக்கும் புத்தக கண்காட்சியில் திரிசக்தி பதிப்பகத்தாரின் கடை எண் 207,208,223,224ல் சிறுகதை தொகுப்பு இடம்பெற்றிருக்கும்.
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றி :)
நன்றியில் நீராடும் விழிகளுடன்,- நிலாரசிகன்.
2009/12/21 Umanath Selvan <umanaths@gmail.com>
நன்றி இலந்தை ராமசாமி அவர்கள்.(வேறு ஒரு குழுமத்தில் இருந்து சுட்டுட்டன்... :) )2009/12/21 Umanath Selvan <umanaths@gmail.com>
அக்கா நீங்க வந்தது சந்தோஷமாக இருந்தது. நிஜமா ரொம்ப சந்தோஷம். படங்கள் கொஞ்சம் தான் எடுத்திருக்காங்க. நான் முன்னாடி சிக்கிகிட்டதால எதுவும் எடுக்க முடியல.நம்ம நிலா தான் நிகழ்ச்சியின் நாயகன். கலக்கிட்டான். பெருமையா இருந்தது. பெரிய எழுத்தாளராகிட்டான் ;) வாழ்த்துக்கள் நிலா.ஜாப்பர் ஐயா வந்திருந்தது இன்னும் சந்தோஷமா இருந்தது. ஐயா எந்த ஊரில் இருக்காருன்னு தெரியாம நாங்க ரெண்டு பேரும் அழைக்காம விட்டுட்டோம். மன்னிக்கனும் மன்னிக்கனும்..ரமணன் அண்ணா தொகுத்து வழங்கிய விதம் சூப்பர். தேன் போல இருந்தது. ரவி ஐ.பி.எஸ் கச்சிதாமா பேசினார். பிறைசூடன் வல வலா..தேவையில்லாம நிறைய பேசிட்டு இருந்தார்.அடுத்த வருட இலக்கு 200 புத்தகமாம் திரிசக்தி பதிப்பகத்தாருக்கு. நிச்சயம் வெற்றி பெரும்.2009/12/21 shylaja <shylaja01@gmail.com>20டிசம்பர் மாலை.முந்தின நாட்களில் பெய்திருந்த மழைகாரணமாக சில்லென்ற காற்று வீச அண்ணாசாலையில் தேவநேயப்பாவாணர் சிற்றரங்கத்தில் நடந்த திரிசக்தி பிரசுரத்தின் புத்தகவெளியீட்டுவிழாவிற்கு புறப்பட்டேன்.முதலில் 5கிலோமீட்டருக்கு சுகமான வால்வோ பஸ்ஸில் ஏசியை அனுபவித்தபடி எஃப் எம்மில்' நான் அடிச்சா தாங்க மாட்டே ' கேட்டுக்கொண்டு பயணம். இடையிடையே கையில் ( உறவினரின் 150அமெரிக்கடாலர்மதிப்புள்ள வாட்ச்) பெருமையாய் மணிபார்த்தபடி"முன்னாடியே போறோம் எல்லாரையும் பார்த்து பேசிடலாம்" என்ற மனக்கணக்கு!வழியில் கண்டக்டர் இறக்கிவிட்டு'இங்கேருந்து நீங்க சொல்ற இடத்துக்குபோயிடுங்க அந்த வழிபஸ் போகாது" என சொல்லவும் கீழே இறங்கினேன்(அப்போதாவது கவனித்திருக்கலம்)ஸ்ரீரங்கத்திலும் பெங்களூரிலும் சந்துபொந்தெல்லாம் அத்துப்படி ஆன அளவுக்கு சென்னையின் பெரிய சாலைகள்கூட எனக்கு இன்னமும் பழக்கமாகவில்லை என்பதை ஆட்டோக்காரர் அரைகிலோமீட்டருக்கு ஐம்பதுரூபாய்கேட்டபோது தான் நன்கு விளங்கியது! (அப்போதாவது கவனித்திருக்கலாம்)ஆட்டோக்காரருக்கு பணத்தைக்கொடுத்துவிட்டு ,அரங்கத்தை ஒட்டிய நூலகத்தில் நுழைந்து அங்கே செல்போனில் கொஞ்சிக்கொண்டிருந்த சின்னப்பெண்ணிடம்,"இங்கயா த்ரிசக்தி விழா நடக்குது?' எனக்கேட்டேன்' விரலை அவள் உயர்த்திக்காட்டினாள்.அருகே மாடிக்குச்செல்லும் படிக்கட்டுகளில் திரிசக்தி பானரையும் பார்த்தபடி வேகமாய் ஏறும்போது சிலர் வரவேற்றனர். மேல்படிக்கட்டில் இரண்டு துவாரபாலகர்கள் புன்னகைததும்ப 'ஹை அக்கா 'என்றதும் 'ஹை நிலா ஹை விழிஸ் 'என்று கைகளைக்கொடுத்தேன்)அப்போதாவது கவனித்திருக்கலாம்)"ரொம்ப மகிழ்ச்சிக்கா நீங்க வந்ததுல..""பின்ன வராம இருப்பேனா? சென்னைக்கு சொந்தக்காரங்க மறைவுகாரியத்துக்காக சடனா வந்தேன்னாலும் இன்னிக்கு இந்த ஃபங்கஷன்ல எப்டியாவது கலந்துட்டு ராத்ரி ஒன்பதரைபஸ்சைப்பிடிக்க ஓடிடலாம்னு வந்தேன். ஆமா யார்லாம் வந்திருக்காங்க?'எனும்போது அந்த இடத்தில் ஒளிபாய்ந்தது இசைக்கவிரமணன் பிரசன்னமானார். என்னிடம்."இவங்களை எங்கயோ பாத்தமாதிரி இருக்கே?'[ என்று குறும்பாய் அவர் ஆரம்பிக்க நிலா சிரிக்க விழியன் முகம் மலர மகிழ்ச்சியான அளவலாவல் ஆரம்பமானது(அப்போதாவது கவனித்திருக்கலாம்)ஹரிக்ருஷ்ணன் மதுரபாரதி வெங்கட்சாமிநாதன் என்று எல்லாரும் வந்தாச்சு. என்று தகவல் வந்ததுஉள்ளே அழகான மெத்தென்ற நீலநிற இருக்கைகள் கொண்ட ஏசி அரங்கம். மேடையில் திரிசக்தி புத்தகவெளியீட்டுவிழா எனும் பெரிய பானர். அழகான மேடை.திரிசக்தி பத்திரிகைக்குடும்பமும் தேவதை பத்திரிகைக்குடும்பமும் அங்கு சூழ்ந்து சுறுசுறுப்பாய் இயங்க்கிக்கொண்டிருக்க அரங்கத்தில் நுழையும் முன்பாக இனிப்பு காரம் தேநீர் அருந்திச்செல்லலாம் என நிலா கருத சரியென்று சிக்கனமாய் அதே சமயம் மிகச்சுவையாய் இருந்த இனிப்பு மற்றும் போண்டாக்களைமுழுங்கிவிட்டு காற்றில் கலைந்த கேசத்தை சரி செய்ய அருகில் இருந்த லேடீஸ் டாய்லெட்டில் நுழைந்தேன் கண்ணாடியில் முகம்பார்த்து தலைதிருத்தி வெளியேவந்தேன்(அப்போதாவது பார்த்திருக்கலாம்)\\
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment