Friday, December 18, 2009

Re: [தமிழமுதம்] தண்டனையை பரிந்துரையுங்கள்... உங்கள் எண்ணத்தை பிரதிபலியுங்கள்.


அவனை படைத்த கடவுளை என்ன செய்வது?   //
 
நீதிமன்றத்துக்கு அழைத்து முதலில் விசாரணை செய்யலாம்.
------
 
இப்போ இந்த செய்தியில் மேட்டர் என்னவென்றால் அடிப்படை காமம்.  21 வயதை எட்டி இருக்கும் ஒரு ஆண்மகனுக்கு ஏற்பட்ட எதார்த்த காம ஆசை, காம வெறியாக மாறி இருக்கிறது.
 
அந்த காமம் முதலில் பெண்ணை தேடி இருக்கும், பெண் கிடைக்காதபட்சத்தில் (அல்லது) ஏதோ ஓர் பயத்தின் காரணமாக அது சிறுவன்மேல் பாய்ந்திருக்கிறது.
 
காமத்தை தீர்த்து கொண்ட காம வெறியன், வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதி, சிறுவனை கொலை செய்யும் அளவுக்கு போய் இருக்க வேண்டும்.
 
இதற்கு காரணம் ஊடகங்கள்.  காமம் சம்பந்தபட்ட புத்தகங்கள், முதலில் தமிழ் சினிமா, ஹிந்தி சினிமா, ஆங்கில சினிமா அதனை தொடர்ந்து காம படங்களை பார்த்ததன் விளைவு/பாதிப்பு.
 
இங்கே அவன் திட்டமிட்டு கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை.  செல்வன் முன்பு சொல்லி இருந்தது போல திட்டமிட்டு கொலை செய்தவனுக்கே மரண தண்டனை தர வேண்டும். ஆனால் இது அந்த நேரத்தில் ஆவேசத்தில் செய்த கொலை.  இதற்கு என்ன தண்டனை வழங்க வேண்டும்? அல்லது முடியும்.
 
மனிதம் நிறைந்திருக்கும் மனிதர்களே ஏன் மன்னிப்பு வழங்க மறுக்கிறீர்?
 
1.  ஒருவர் வந்து சொல்லலாம்.  21 வயதை எட்டிய ஒரு ஆணுக்கு காமம் தீர்த்துக் கொள்ள ஒரு
     வடிகால் விபச்சார விடுதி இருந்திருந்தால், இப்படி ஓர் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை.
     ஆதலால் விபச்சார விடுதியை வரவேற்கலாம்.
 
2.   இன்னொருவர் சொல்லலாம், 21 வயதுக்கு முன்பே, 18 வயதை எட்டிய ஒருவனுக்கு திருமணம்
      முடித்தால், இப்படி ஓர் சம்பவம் நடக்க வாய்ப்பு இல்லை.
 
 
சிறுவனை இழந்த குடும்பத்திற்கு, அந்த இழப்பிற்கு நிகர் வேறு இல்லை என்றாலும்கூட, கொலைகாரனிடம் இருந்து ஒரு பெரிய தொகையை பெற்று சிறுவனின் குடும்பத்திற்கு தர வேண்டும்.
 
அவனிடம் காசு இல்லாதபட்சத்தில், காவல் துறையின் உதவியோடு ஐந்து முதல் பத்து வருடங்கள் உழைத்து மாதம், மாதம் ஒரு தொகையை சிறுவனை இழந்தவருக்கு தர வைக்கலாம்.
 
இதற்கு இடையே இவன் மறுபடி இது மாதிரி தவறு செய்யும்பட்சத்தில், இவனுக்கு எந்த ஓர் நிபந்தனையுமின்றி, மரண தண்டனையை நிறைவேற்றலாம்.
 
 
      
 
      
 
 
 
 
 

 

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
நட்புடன்
மீரான்
www.sinegum.wordpress.com
www.vaalkaikalvi.blogspot.com



--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment