என் செய்யுள் கவிதையைப்படித்து பாராட்டி திருத்தம் சொல்லி அன்பான
ஆலோசனயும் அளித்ததற்கு
மிக மிக நன்றி.
"இன்னா நைனா போய்க்கினே கீர"
"ஹாய் மச்சி!காலேஜ் காம்பவுண்டில் கடல போட்டு அலுத்தாச்சு.பீச் போலாமா?"
இன்னும்
நம் சங்கத்தமிழின் "சங்கை"நெறிக்கும் காட்சிகள் கண்டு
உள் கனன்று வந்தவையே இந்த வரிகள்.
இது தவிர "இயற்பியல்" ஒளி சேர்த்து நம் பைந்தமிழை அழகு பார்ப்பதும்
புதுக்கவிதைத் தொங்கட்டான்கள் அணிவித்து மகிழ்வதும்
எனக்கு பிடிக்கும்.உங்கள் ஆதரவும் பாராட்டும் தரும் ஊக்கமழையில்
அவ்வப்போது
இந்த எழுத்துக்காளான் குடைகளையும் விரிப்பது என் வழக்கம்.
நீங்கள் ஏதோ ஒரு
"பல்யாக சாலை முதுகுடுமிப்பெருவழுதி"யின் பாட்டுக்கு
பொருள் விரித்து தந்ததுபோல் தந்ததும் எனக்கு பெருமகிழ்ச்சி
அளிக்கிறது.மீண்டும் நன்றி.
ஓலை நறுக்கை மிகவும் ஆர்வமாய் தட்டச்சு செய்ததில்
விழுந்த பிழை அது.பொறுத்து அருள்க.அவலை நினைத்து உரலை இடித்தது போல்
("சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்"இல்லை நான்)இந்த விசைப்பலகை
ஓரம் கொஞ்சம் தூங்கி(உறங்குவது போல் தான் சாக்காடும்)விழுந்து தட்டி
எழுத்துகள்"நறுக்கு"என்பதற்கு பதில் நுறுக்கு ஆகிவிட்டது.
"கான்மறை சிலம்ப" என்பதில் காட்டின் மறைவிடங்கள்
சில் வண்டு ஓசைகளால் துளை படுவதை எழுதினேன்.
"புனிற்று இளம்" என்பதயும் கூட பொறிகள் எனும் புள்ளிகள் படர்ந்த
வருடை(மான்)குட்டி போல புதிய ஆண்டு துள்ளிவருவதை
காட்டியிருக்கிறேன்.ஆனால் அதில் ஆண்டு எனும் கிளவியின் வேர் இருப்பதை
தாங்கள்
சுட்டிக்காடியமைக்கும் மிக மிக மகிழ்ச்சி.
அன்புடன்
ருத்ரா
On Dec 20, 5:02 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> தலைப்பு ஓலை நறுக்கு என இருக்க வேண்டும் அன்றோ?
>
> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி
> (வள்ளுவம் என் சமயம்)
> "உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment