Monday, December 21, 2009

Re: [தமிழமுதம்] பிரட்டனுக்கு ராணி அவசியமா ?



21 டிசம்பர், 2009 7:34 pm அன்று, காமேஷ் <kameshcn@gmail.com> எழுதியது:

லண்டன்;பொருளாதார மந்த நிலை காரணமாக, இன்னும் ஒரு ஆண்டுக்கு பிரிட்டன் ராணியின் சம்பளம் உயர்த்தப்பட மாட்டாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் அரச குடும்பத்துக்கு சொந்தமான பிரம்மாண்ட அரண்மனையை பராமரிப்பதற்காகவும், நிர்வாக செலவுகளுக்காகவும் அரசு சார்பில், ஆண்டுக்கு 60 கோடி ரூபாய், சம்பளமாக பிரிட்டன் ராணிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.நிர்வாக செலவுகள் அதிகரித்து விட்டதால், இந்த சம்பளத்தை உயர்த்த வேண்டும் என, அரண்மனை வட்டாரங்கள், அரசை வலியுறுத்தி வருகின்றன.ஆனால், பொருளாதார மந்த நிலை காரணமாக, தொழில் துறை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், செலவுகளை சமாளிக்க முடியாமல் பிரிட்டன் அரசு திணறி வருகிறது.

இதன்காரணமாக, சிக்கன நடவடிக்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தற்போது சம்பள உயர்வு இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சம்பள உயர்வு அளிக்கப்பட்டால், தேர்தல் நேரத்தில் அது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், பிரிட்டன் ராணிக்கும் தற்போதைக்கு சம்பள உயர்வு இல்லை என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் முடிந்தபின், சம்பள உயர்வு குறித்து ராணியுடன், பிரதமர் கார்டன் பிரவுன் விவாதிப்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4453


~காமேஷ்~



60கோடி சம்பளம் இந்தம்மாவுக்கு அவசியமா ?

அரண்மனைக்கு வெளியில் உண்டியல் வச்சா ராணி குடும்பம் தேவைனு நினைக்கும் மக்கள் பணம் போட்டு போகலாம்.

ஆட்சியை உவந்து மக்களிடம் கொடுத்தற்கு நன்றிக்கடன்
 


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment