Sunday, December 20, 2009

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] அரசனின் வேர் ராஜனா?



19 டிசம்பர், 2009 11:17 am அன்று, வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com> எழுதியது:
ராயர் தான் ராயுடு

பால் என்ற தமிழ் சொல் பார்ட் என ஆங்கிலத்துக்கு போனது
ஆறு ரிவர் ஆச்சு
வள்-வளை-வண்டி- வாகணம் ஆச்சு
உருள்- ரொடேட் ஆச்சு
பரவு -பிரொப்பகேட், பிராலிஃபிக், ப்ராய்சுபர் என்பவற்றின் முன் ஒட்டு
இன்ன பல தமிழ் வேர்களும் மேனாட்டு மொழிகளில் உண்டு

இவை மானுடம் உலகம் எல்லாம் பரவுமுன் வேரூன்றிய சொற்கள்

தனித்தனி மொழிகள் என பாற்பட்டபின்  பின் பரவிய சொற்களாக கருத முடியாது


எனக்கு அரவணைப்பு என்ற சொல் தனி ஆர்வம் கொடுக்கு

அது அரவம் + அணைப்பு என்றால் ஆண் பெண் கூடலில் நிகழும் அணைப்புதான் அரவணப்பாக இருக்க முடியும். ஆனால் நாம் அரவணைப்பு என்ற சொல்லை பல இடங்களிலும் பயன்படுத்துகிறோம்
அங்கு அர + அணைப்பு என்றால் அர எனும் சீருக்கு காத்தல் என்ற பொருள் பொருந்தும். தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் புள்ளினம் போல அணைப்பது
 
 

19 டிசம்பர், 2009 11:07 am அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:

அது வடமொழியில் மட்டுமில்லை.லத்தீன், பாரசிகம், ஆங்கிலம் என இந்தோ-ஐரோப்பிய மொழி சொற்கள் அனைத்திலும் உள்ளது.ஆக இது இந்தோ-ஐரோப்பிய சொல் என தெளிவு.

அரசமரம் என்றால் மரங்களுக்கு அரசன் என பொருள்.புத்தர் காலத்துக்கு பிறகு இந்த மரத்துக்கு இந்த பெயர் வந்து இருக்கலாம்.தெலுங்கு பிறந்து ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகிறது.தெலுங்கில் ராஜாவை ராஜாவை ராயுடு என சொல்லியிருப்பார்கள். ராயர் என்பது தமிழ்.கிருஷ்ணதேவ ராயுடு என்பது தெலுங்கு.

2009/12/19 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
அரண் எனில் காப்பு. காப்புள்ள மனை அரண்மனை
காப்பவன் அரசன். அவன் மனைவி அரசி, காப்பது அரசு

அரசன் அரையன் மரூஉ
அரையன் ராயன் என தெலுகில் மாறும். தெலுகு மொழி வடமொழியிலிர்ந்து நேரடியாக சொற்களை இறக்குமதி செய்யும் போது ராயர் என்ற சொல் தமிழிலிருந்து போக தேவை ஏன்?

அரச மரத்தை தெலுகில் ராய்மான் என்பார்கள்

அடை, அணை எனும் சொற்கள் காக்கும் பொருளில் வருவது போல அரை, அல்லது அர வழங்கி இருக்கலாம். அரண் அதன் அடி பிறப்பே

பதுங்கு, பம்பு, படர், பாய் என   ஒரே செயலில் பல படிகளை குறிக்க தமிழ் சொற்கள் தளிர்க்கின்றன.
தவழ், தத்து,  தயங்கு,  தாண்டு, தாவு

ஒரு சொல் வடமொழியிலும் தமிழிலும் இருந்தால் உடனே அது வடசொல் என துணிகிறார்கள்

வீறு என்ற சொல் வீர்யம் என ஆனது
பூண் என்ற சொல் பூஷண என்றானது
சிதை என்ற சொல் சேதம் ஆனது
மையல் என்ற சொல் மோகம் ஆனது

எண்ணி பார்த்தால் எண்ணில் அடங்கா.


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment